Pages

Wednesday, November 25, 2009

சீரியல் நயகியகியான கௌதமி ?

நடிகை கவுதமியும் சீரியல் நாயகியாகி விட்டார். தமிழ் சினிமாவின் முன்னணி நாயகிகள் வரிசையில் இருந்த நடிகைகள் சினிமாவில் வாய்ப்பு குறைந்ததும் சின்னத்திரைக்கு வருவது புதிதல்ல. குஷ்பு, ரம்யா கிருஷ்ணன், தேவயானி என பல நடிகைகள் சீரியல் நாயகியாகி சின்னத்திரையில் சாதித்து வருகிறார்கள். அந்த வரிசையில் புதிதாக இணைந்திருப்பவர் நடிகை கவுதமி. சின்னத்திரையில் சீரியல் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியபோதே கவு‌தமிக்கு பலரும் வலைவீசினார்கள். அந்த வலையில் எல்லாம் சிக்காமல் இருந்த கவுதமி இப்போது கலைஞர் டி.வி.,யில் ஒளிபரப்பாக உள்ள ஒரு சீரியலில் நடிக்க சம்மதித்து விட்டார். அந்த தொடரின் பெயர் அபிராமி. கலைஞர் டி.வி.,க்காக அபிராமியை தயாரிப்பவர் அபிராமி ராமநாதன். இந்த சீரியல் பூஜையில் நடிகர் கமல்ஹாசன், குஷ்பு, கவுதமி, தயாரிப்பாளர் ராம.நாராயணன், மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

1 comment:

  1. She may say I am not acting for money. Just for mental satisfaction and to pass my time I am acting in the serial .G8.

    ReplyDelete