Pages

Monday, November 30, 2009

பிரபல பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றிய புதிய நூல்

பிரபல பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி குறித்த நூலை தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை இயக்குநர் கே.நட்ராஜ் சென்னையில் வெளியிட்டார். பி.எஸ்.பி.பி.குழுமப் பள்ளிகளின் டீன் திருமதி. ஒய்.ஜி.பார்த்தசாரதி, இசைக் கலைஞர் சுஜாதா விஜயராகவன் ஆகியோர் அதைப் பெற்றுக்கொண்டனர். ஹம்சத்வணி ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் திருமதி. ஒய்.ஜி.பி. பேசுகையில், எம்.எஸ். ஒரு முழுமையான இந்திய பெண். எளிமையான வாழக்கை வாழ்ந்தவர்; இசைக் கலைஞர்களும் இசை ஆர்வலர்களும் இந்த நூலை வைத்திருக்க வேண்டியது அவசியம். ஒவ்வொரு இந்தியனும் எம்.எஸ்.,சின் இசை மற்றும் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். இந்த நூல் விற்பனையில் கிடைக்கும் தொகை, ஓரிருக்கை கிராமத்தில் காஞ்சிப் பெரியவரின் மணி மண்டபம் கட்டுவதற்காக ஸ்ரீ மகாலட்சுமி மாத்ருபூதேஸ்வரர் அறக்கட்டளையிடம் அளிக்கப்படும் என்று ஹம்சத்வணி செயலாளர் ஆர்.சுந்தர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment