சிங்கப்பூரர்களின் மன நலம் குறித்து மிகப் பெரிய அளவில் தேசிய அளவிலான ஆய்வு நடத்தப்பட உள்ளது.
அடுத்த ஆண்டில் நடத்தப்பட உள்ள இந்த ஆய்வில், இங்கு தற்போதுள்ள பல்வேறுபட்ட மனநல பிரச்சினைகள் குறித்து ஆராயப்படும்.
இதற்காக தேர்வு செய்யப்பட்ட 15,000 பேர் நேர்முகம் காணப்படவுள்ளனர். அவர்களது வீடுகளில் ஆய்வு நடத்தப்படும். ஆய்வில் பங்கேற்பவர் விவரங்கள் பாதுகாக்கப்படும்.
ஆய்வு எடுப்பதில் பயிற்சி பெற்றவர்கள் கிட்டத்தட்ட 600 கேள்விகளைக் கேட்பர். இரண்டு மணி நேரம் ஆய்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆய்வில் பங்கெடுப்பவருக்கு ஆய்வின் முடிவில் $50 வழங்கப்படும்.
மனநல மருத்துவக் கழகம் நடத்தும் இந்த ஆய்வில், மன நோய்க்கான அறிகுறிகள், குடும்பத்தில் எவருக்கேனும் மனநல பிரச்சினை உள்ளதா போன்ற பல விஷயங்கள் ஆராயப்படும்.
உலக அளவில் நான்கில் ஒருவர் மன நோயினால் பாதிக்கபட்டுள்ளனர்.
ஆனால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் இரு பங்கினர் சிகிச்சை எடுப்பதில்லை. வளமான நாடுகளில் கூட பலர் சிகிச்சைக்குச் செல்வதில்லை.
சிங்கப்பூரிலும் அத்தகைய நிலைமை உள்ளதா என்பதை ஆராய இந்த ஆய்வு நடத்தப்படுவதாக இணை பேராசிரியர் சோங் சியோவ் அன் கூறினார்.
கடந்த 2004ம் ஆண்டில் மனஅழுத்தம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
தற்போது சிங்கப்பூரர்களின் முழுமையான மனநலம் குறித்து ஆழமான, விரிவான ஆய்வு நடத்தப்படுகிறது.
மதுப் பயன்பாடு, சூதாட்டப் பிரச்சினை, புகைத்தல் போன்றவை குறித்தும் இந்த ஆய்வில் ஆராயப்படும்.
Wednesday, November 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment