இந்தியா-பிரெஞ்சு கூட்டுத் தயாரிப்பில் ஐயம் கலாம் என்றொரு படம் தயாராகி வருகிறது. இது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் சொன்ன கனவு காணுங்கள் என்ற அறிவுரையை பின்னணியாக கொண்டு தயாரிப்பப்பட்டு வருகிறது.இந்தி நடிகர் குல்சன் குமராவர் நடிக்கும் இந்த படத்தை மாதவ்பண்டா இயக்கி வருகிறார். இந்த படத்தில் அப்துல்கலாம் நடிக்கிறார் என்று நடிகர் குல்சன் குரோவர் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், ஐயம் கலாம் படத்தின் படப்பிடிப்புகள் ராஜஸ்தானில் படமாக்கப்பட்டுள்ளன. அப்துல்கலாம் ஒத்துழைப்பு கொடுத்துள்ளார் என்றார்.
நடிகர் குல்சன் குரோவரின் பேட்டிக்கு அப்துல்கலாம் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதில், சினிமா படம் எதிலும் அப்துல்கலாம் நடிக்கவில்லை. சிலர் தங்களது தனிப்பட்ட விளம்பரத்துக்காக இப்படி தகவல் வெளியிட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி நடிகர் குல்சன் குரோவரிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், அப்துல்கலாமுக்கு நாங்கள் அவமரியாதை செய்ய வில்லை. நாட்டின் ஒற்றுமை சின்னமாக அவர் திகழ்கிறார். அவர் இல்லாமல் இந்த படமே இல்லை என்றார்.
Saturday, November 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment