Pages

Wednesday, November 25, 2009

ஹிந்தியில் அபிஷேக் பச்சனை வைத்து கில்லியை இயக்கும் பிரபுதேவா?

நடிகர் அபிஷேக் பச்சனை வைத்து இந்தியில் கில்லி படத்தை இயக்க நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா திட்டமிட்டுள்ளார். டைரக்டர் தரணி இயக்கத்தில், விஜய் - த்ரிஷா நடிப்பில் 2004ல் வெளியான சூப்பர் ஹிட் படம் கில்லி. காமெடி, சென்டிமென்ட் என சகல அம்சங்களும் நிறைந்த இந்த படத்தை இந்தியில் இயக்க பிரபு தேவா முடிவு செய்துள்ளார். இதற்காக சமீபத்தில் அபிஷேக் பச்சனை சந்தித்த பிரபுதேவா, கில்லி கதையை அவரிடம் கூறியிருக்கிறார். கதை பிடித்துப் போனதால் இந்தி கில்லியில் நடிக்க அபிஷேக் சம்மதித்து விட்டாராம்.

No comments:

Post a Comment