Pages

Saturday, November 28, 2009

சிங்கப்பூர் கல்வி அமைச்சகம் சார் தமிழாசிரியர்கள் குழுத் தலைவர் தமிழரசி

சீனா, மலாய் மொழியைப் போல் சம அந்தஸ்தில் பள்ளிகளில் தமிழ் மொழி கற்றுத் தரப்படுகிறது என்று விழுப்புரத்தில் நடந்த கற்றல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், சிங்கப்பூர் கல்வி அமைச்சகம் சார் தமிழாசிரியர்கள் குழுத் தலைவர் தமிழரசி பேசினார். விழுப்புரம் தெய்வானையம்மாள் மகளிர் கல்லூரியில் நடந்த கற்றல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், சிங்கப்பூர் கல்வி அமைச்சகம் சார் தமிழாசிரியர்கள் குழுத் தலைவர் தமிழரசி பேசியதாவது: இங்கு, 10ம் வகுப்பு வரை உயர் நிலைப்பள்ளி என்று கூறுவது போல், சிங்கப்பூரில் ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரையில் உயர்நிலைப்பள்ளி என்கின்றனர். தமிழ் மொழி இங்கு பயிற்று மொழியாகவும், அதிகார மொழியாகவும் உள்ளது. ஆனால், மேலை நாடுகளில் இரண்டாவது மொழியாக தமிழ் கருதப்படுகிறது. சீனா, மலாய் மொழியைப் போல் சம அந்தஸ்தில் பள்ளிகளில் தமிழ் மொழி கற்றுத் தரப்படுகிறது. தமிழ் மொழி அறிவை விரிவுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே நாங்கள் வந்த நோக்கம். இங்கு கற்பிக்கப்படும் முறை, அறிந்து கொள்ளும் முறைகளை தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.


நாங்கள் இங்கு கற்பித்தல் முறைகளை அனுபவபூர்வமாக அறிந்து கொண்டு, இது போன்று சிங்கப்பூரில் மாணவர்களுக்கு தமிழை கற்றுக் கொடுக்க விரும்புகிறோம். இங்குள்ள பண்பாட்டு, கலசார முறைகளை இன்றும், நாளையும் தெரிந்து கொள்வோம். மேலை நாடுகளில் தமிழ் இளங்கலை பட்டப் படிப்பு இல்லை. இதனால், அங்கிருந்து தமிழகத்திற்கு வந்து தமிழ் இளங்கலை பட்டப் படிப்பு கற்க வேண்டியுள்ளது. தமிழ்க் கல்வி மேன்மேலும் வளர, விரிவுரையாளர்கள் அதற்கான பணிகளில் முழுமையாக ஈடுபட வேண்டும். இவ்வாறு தமிழரசி பேசினார்.

No comments:

Post a Comment