Pages

Thursday, November 26, 2009

ரேநிகுண்டாவுக்கு தடை ?

சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் ரேனிகுண்டா படத்தில் ரீலிஸ் தள்ளிப் போயுள்ளது. ரேனிகுண்டா இந்த வாரம் ரீலிஸ் ஆகவிருந்தது. படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு சில காட்சிகள் ஆட்சேபத்துக்கு உரியதாக இருந்ததால் சென்சார் போர்டு சான்றிதழ் வழங்க மறுத்து விட்டார்கள். குறிப்பிட்ட சில காட்சிகளை நீக்கும்படி சென்சார் போர்டு கூறியதை ரேனிகுண்டா தரப்பினர் ஏற்க மறுத்து விட்டனர். இதனால் ரேனிகுண்டா மறு தணிக்கைக்கு கொண்டு செல்லப்படுகிறது. படத்தின் ட்ரைலர் மற்றும் விளம்பரங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையி் ரேனிகுண்டா ‌தள்ளிப்போயிருப்பதால் விநியோகஸ்தர்கள் கவலைப்குள்ளாகி இருக்கிறார்கள். இருப்பினும் விரைவில் சென்சார் சான்றிதழ் பெற்று டிசம்பர் 4ம்தேதி படத்தை ரீலிஸ் செய்து விடுவோம் என்று தயாரிப்பாளர் தரப்பில் உறுதி கூறப்பட்டிருக்கிறதாம்.

No comments:

Post a Comment