Pages

Friday, November 27, 2009

கிளந்தானில் இருந்து கோலாலம்பூருக்கும் சிங்கப்பூருக்கும் செல்லும் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

மலேசியாவில் ஏற்பட்டிருக்கும் வெள்ளம் இதற்குக் காரணம்.
நிலைமை சீரடையும்வரை ரயில் சேவை தொடங்கப்பட மாட்டாது.
ரயில் சேவை நிறுத்தப் பட்டதால், ஆயிரக் கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
ஹஜ்ஜுப் பெருநாளுக்காக ரயில் பயணத்திற்குப் பதிவு செய்திருந்தவர்கள், வேறு பயண ஏற்பாடுகளைச் செய்ய நேர்ந்தது.
தும்பாட்டில் இருந்து கோலாலம்பூருக் குச் செல்லும் திமுரான் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும், தும்பாட்டில் இருந்து சிங்கப்பூருக்குச் செல்லும் வாவ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் பாதிக்கப் பட்டதாக கேடிஎம் நிறுவனத்தின் கிழக்கு வட்டார நிர்வாகி இப்ராஹிம் சுலைமான் தெரிவித்தார்.
ரயில் பயணம் நிறுத்தப் பட்டதால் பாதிக்கப் பட்டவர்களுக்குப் பணம் திருப்பித் தரப்பட்டது.

No comments:

Post a Comment