Pages

Monday, November 30, 2009

சிங்கப்பூரில் இறக்குமதியாகும் பழங்கள், காய்கறிகள் விற்பனைக்கு அனுப்பும் முன் பரிசோதனை ?

சிங்கப்பூர் ஒவ்வோர் ஆண்டும் 400,000 டன்னுக்கும் அதிகமாகப் பழங்களும் காய்கறிகளும் இறக்குமதி செய்கிறது. இவையனைத்தும் உட்கொள்வதற்குப் பாதுகாப்பானவை என்பதை உறுதிப் படுத்த வேளாண் உணவு, கால்நடை ஆணையம் பரிசோதனை செய்கிறது.
சிங்கப்பூரில் இறக்குமதியாகும் பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றில் பெரும் பாலானவை, விற்பனையாவதற்கு முன்பு பாசிர் பாஞ்சாங் மொத்த விற்பனை சந்தைக்குச் செல்கின்றன.
ஒவ்வொரு நாளும், பத்துக்கும் மேற்பட்ட வகை பழங்கள், காய்கறி களிலிருந்து ஏதேச்சையான முறையில் சிலவற்றை ஆணையம் தேர்ந்தெடுத்து, பரிசோதனை செய்கிறது.
சில வகை காய்கறிகள் மற்ற வகை காய்கறிகளை விட அதிகம் பாதிக்கப்படக் கூடியவை.
“குறிப்பாக, கீரை வகைகளும் பூச்சி களால் தாக்கப்படக்கூடிய காய்களும்” என்றார் ஆணையத்தின் விலங்கு பொதுச் சுகாதாரப் பிரிவின் துணை இயக்குநர் டாக்டர் பால் சியூ.
“இதுபோன்ற விளைச்சல்களில், விவசாயிகள் அளவுக்கு அதிகமாகப் பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்திவிடக் கூடும்” என்றார் அவர்.
ஆணையத்தின் ஆராய்ச்சிக் கூடத்தில், ஒவ்வொரு மாதிரிப்பொருளும் 150க்கும் மேற்பட்ட இரசாயனங்கள், ஹார்மோன்கள், தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியா கிருமிகள் போன்றவை கலந்திருக்கிறதா எனப் பரிசோதிக்கப் படும்.
சென்ற ஆண்டு வாரியம் 11,000க்கும் மேற்பட்ட மாதிரிப் பொருட்களைப் பரிசோதித்தது. அவற்றில் 180 பொருட்கள் தேறவில்லை.
“மாதிரிப் பொருட்கள் ஆராய்ச்சிக் கூடத்தில் சோதிக்கப்படும்போது, அது எடுக்கப்பட்ட மொத்த சரக்குகள் இறக்குமதியாளரின் குளிர் கிடங்குகளில் தடுத்து வைக்கப்படுகின்றன.
ஆராய்ச்சிக் கூட சோதனை முடிவுகள் திருப்திகரமாக இல்லாவிட்டால், அந்த மொத்த சரக்கும் நிராகரிக்கப்படும்” என்றார் டாக்டர் சியூ.
காய்கறிகள் தவிர, மாமிசம், கடலுணவு இறக்குமதிகளும் விற்பனையாவதற்கு முன்பு பரிசோதிக்கப்படுகின்றன.
பன்றிகள், கோழிகள் ஆகியவற்றில் மனிதர்களுக்குப் பரவக்கூடிய நோய்க் கிருமிகள் இருக்கக்கூடும் என்பதால், மாமிசம் முக்கியமாகக் கவனிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment