Pages

Tuesday, November 24, 2009

பாகிஸ்தானிடம் அதிக அளவில் அணு ஆயுதம் ?

>
இந்தியாவை விட பாகிஸ்தானிடம் அதிக அணு ஆயுதங்கள் உள்ளதாக அமெரிக்க அணுசக்தி வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஆயுதங்களை அதிகம் குவிக்கும் போட்டி மறைமுகமாக நடந்து கொண்டிருக்கிறது.பாகிஸ்தானில் பயங்கரவாதிகளை ஒடுக்க அமெரிக்கா நிதியுதவியும், ஆயுத உதவியும் செய்து வருகிறது.அமெரிக்கா அளிக்கும் நிதியுதவியை பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்துவதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது.இந்திய எல்லைகளுக்கு சொந்தம் கொண்டாடும் சீனாவும் தன் பங்குக்கு அணு ஆயுதங்களை அதிகரித்து வருவதாக அமெரிக்க அணுசக்தி நிபுணர்களான ராபர்ட் நோரிஸ் மற்றும் ஹான்ஸ் கிறிஸ்டென்சன் ஆகியோர் சமீபத்தில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, அணு விஞ்ஞானம் என்ற பத்திரிகையில் இவர்கள் கூறியுள்ளதாவது:இந்தியா, சீனா, பாகிஸ்தான் நாடுகள் தங்கள் ஆயுத கிடங்குகளை பெருக்கி கொண்டே இருக் கின்றன. இந்தியாவிடம் 60 முதல் 80 அணு ஆயுதங்கள் உள்ளன. பாகிஸ்தானிடம் 70 முதல் 90 வரை அணு ஆயுதங்கள் உள்ளன.பாகிஸ்தானும், சீனாவும் எதிரி நாடுகளை உடனடியாக தாக்குவதற்கு ஏற்ப இந்த ஆயுதங்களை பல்வேறு இடங்களில் ரகசியமாக வைத்துள்ளன. பாகிஸ்தான் பல இடங்களில் அணு ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்தாலும், அவை உடனடியாக செயல்படுத்த முடியாத நிலையில் உள்ளன. ஆனால், இந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்கள் உடனடியாக செயல்படுத்தும் வகையில் உள் ளன. சீனா இன்னும் பல படை தளங்களையும், ஆயுத கிடங்குகளையும் உருவாக்கி கொண்டே இருக்கிறது.இவ்வாறு, இவர்கள் தங்கள் கட்டுரையில் தெரிவித்துள்ளனர்.கடந்த 98ம் ஆண்டு முதல் இந்தியாவும், பாகிஸ்தானும் போட்டி போட்டுக்கொண்டு அணு ஆயுதங்களை தயாரிப்பதை அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் ரகசியமாக கண்காணித்து வருகின்றன.

No comments:

Post a Comment