Tuesday, November 24, 2009
அமெரிக்காவின் இரட்டை வேடம் ? விருந்து வைத்து ஆப்பு ?
"இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை துவங்கினால், அமெரிக்கா அதற்கு ஆதரவளிக்கும். ஆனால், அவ்விரு நாடுகளுக்கும் இடையில், மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா விரும்பவில்லை' என, பாக்., மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதி ரீச்சர்டு ஹோல் புரூக் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:பிரதமர் மன்மோகன் சிங்கின் அமெரிக்க பயணம், பாகிஸ்தான் உடனான எங்களின் முக்கியத்துவத்தை குறைப்பதாக அந்நாடு கருதவில்லை.இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை துவங்க தீர்மானித்தால், அமெரிக்கா அதற்கு ஆதரவு தெரிவிக்கும். ஆனால், இவ்விரு நாடுகளுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய விரும்பவில்லை.இவ்வாறு ஹோல் புரூக் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment