Tuesday, November 24, 2009
சபாஷ் போட வைக்கும் தமிழக அரசு ?
பெண் குழந்தைகள் எட்டாவது வகுப்பு தேர்ச்சி பெற்று ஒன்பதாவது சேரும் பட்சத்தில், அவர்களது பெயரில் 3,000 ரூபாய் "டிபாசிட்' செய்யும் மத்திய அரசின் திட்டப்படி, தமிழக கல்வித் துறை, 36 கோடியே 38 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
"பெண்களின் உயர்நிலைக் கல்விக்கு ஊக்கத் தொகை' அளிக்கும் மத்திய அரசின் திட்டம், கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டப் படி, பெண் குழந்தைகளின் பெயரில் 3,000 ரூபாய் வங்கியில் "டிபாசிட்' செய்யப்படும். அவர்கள் 18 வயதை அடையும் போது, இத்தொகையை எடுத்துக் கொள்ளலாம்.இத்திட்டப்படி, அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், உள்ளாட்சி பள்ளிகளில் கடந்த கல்வியாண்டு முதல், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, ஒன்பதாவது வகுப்பு சேர்ந்துள்ள அனைத்து ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பெண்கள், கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்தியாலயாக்களில் எட்டாவது தேர்ச்சி பெற்று, அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள் அல்லது உள்ளாட்சி பள்ளிகளில் ஒன்பதாவது சேர்ந்துள்ள பெண்கள் பயன்பெறலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment