Pages

Wednesday, November 25, 2009

பெரியதாய் வெடிக்கும் புவனேஸ்வரி விபசார வழக்கு ?


பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிய நடிகர்கள் மீது, குற்ற வழக்கு பதிவு செய்து, விசாரணை அறிக்கையை டிச., 15க்குள் சமர்ப் பிக்குமாறு, குமரலிங்கம் போலீசாருக்கு உடுமலை ஜே.எம்.,1, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.


"தினமலர்' நாளிதழில், நடிகைகள் குறித்து வெளியான செய்திக்கு, வருத்தம் தெரிவித்த நிலையிலும், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், அக்., 7ல், கண்டனக் கூட்டம் நடந்தது. இதில், பத்திரிகையாளர்கள் குறித்தும், அவர்கள் குடும்பத்தினர் குறித்தும் நடிகை, நடிகர்கள் தரக்குறைவாக பேசினர். இது குறித்து, மாநிலம் முழுவதும் பத்திரிகையாளர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். நடிகை, நடிகர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்காததால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க, பத்திரிகையாளர்கள் சார்பில், பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது.



உடுமலையில், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில், அதன் தேசிய கவுன்சில் உறுப்பினர் கொழுமம் தாமோதரன் சார்பாக, வழக்கறிஞர் சிங்காரவடிவேல், உடுமலை ஜே.எம்., 1 நீதிமன்றத்தில், அக்., 26ல், வழக்கு தாக்கல் செய்தார். அதில், விவேக்(35), ஸ்ரீபிரியா(45), விஜயகுமார்(55), சூர்யா(25), மஞ்சுளா(52), நளினி(35), சத்யராஜ்(55), சேரன்(35), கவுண்டமணி(55), அருண்விஜய்(22), சத்யப்பிரியா(35) ஆகியோர், அக்., 7ல் நடந்த கண்டன கூட்டத்தின் போது பத்திரிகையாளர்கள்குறித்து தரக்குறைவாகவும், கெட்ட வார்த்தைகளாலும், கொலை மிரட்டல் விடுத்தும் பேசினர். எனவே, இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம், 294 (பி) (கெட்ட வார்த்தைகளால் பேசுவது); 504 (பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல்); 506 (2), (கொலை மிரட்டல்); 503, (குற்றமுறு மிரட்டல், தொந்தரவு செய்தல், வேறு நபர்களுக்கு கேடு விளைவித்தல்); 34 (ஒரே எண்ணத்துடன், ஒன்று கூடி குற்றச்செயலில் ஈடுபட திட்டமிடல்) ஆகிய பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்கு பதிவு செய்து, எதிரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என, மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட, உடுமலை ஜே.எம்., 1 மாஜிஸ்திரேட் சுஜாதா, நவ., 23ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். நேற்று முன்தினம் மனு விசாரணைக்கு வந்தது.


"மனு மீது விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் சுஜாதா, " நடிகர்கள் மீது வழக்கு பதிவு செய்து, வழக்கு விசாரணை குறித்த அறிக்கையை, டிச.,15 க்குள் கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும்' என, குமரலிங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment