Tuesday, November 24, 2009
அமெரிக்கர்கள் பட்டினி ?
அமெரிக்காவில், ஏழில் ஒரு குடும்பம் வீதம் போதுமான உணவின்றி பட்டினியில் வாடுகின்றனர் என்றால் நம்ப முடிகிறதா? உண்மை தான். போதுமான உணவின்றி அமெரிக்க மக்கள் தவிப்பதற்கு, பொருளாதார நெருக்கடியும், வேலையின்மையும் தான் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில், அரசின் உணவுப்பாதுகாப்பு அமைப்பு , பதினான்கு ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்டது. விவசாய அமைச்சகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட இந்த அமைப்பு, ஒவ்வொரு ஆண்டும், அமெரிக்கர்களின் உணவுப்பாதுகாப்பு பற்றி சர்வே எடுத்து வருகிறது. சமீப காலமாக எடுக்கப்பட்ட சர்வேக்களில், அமெரிக்காவில், போதுமான உணவு இல்லாமல், பற்றாக்குறையுடன் காலம் தள்ளும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. கடந்தாண்டு அமெரிக்காவில், 4.90 கோடி பேர் போதிய உணவின்றி தவித்துள்ளனர். அதாவது, ஏழு குடும்பங்களில் ஒன்று வீதம் பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது . இவர்களில், மூன்றில் ஒரு பங்கினர் மிக மோசமான நிலையில் உணவின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், சில வேளை உணவு சாப்பிடாமல் பட்டினியாக இருக்க வேண்டிய நிலை உள்ளது.எஞ்சியுள்ள மூன்றில் இரண்டு பங்கினருக்கு, சாப்பிட போதுமான உணவு கிடைத்தாலும், மிக விலை குறைந்த, உணவுகளே சாப்பிடுகின்றனர்.அமெரிக்காவில், இந்தாண்டு 5.60 லட்சம் குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் பசியால் வாடுகின்றனர். முந்தைய ஆண்டு, 3.23 லட்சம் குழந்தைகள் மட்டுமே பசியால் வாடினர். இந்தாண்டு உணவின்றி இருப்போரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது, நாட்டின் உணவு பாதுகாப்பின்மையே காட்டுகிறது.ஆனால், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, வரும் 2015ம் ஆண்டிற்குள் குழந்தைகள் பட்டினிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, ஆய்வாளர்கள் கூறுகையில்,"பசியால் வாடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு, வேலையின்மை வீதம் கடந்தாண்டு இறுதியில், 4.9 சதவீதத்தில் இருந்து 7.2 சதவீதமாக அதிகரித்ததே காரணம். தற்போது அந்த வீதம், 10.2 சதவீதமாக உள்ளது. மேலும், உணவுப் பொருட்களின் விலையேற்றமும், இதற்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது'என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Atlast Mr.obama admits that what is happening in America ? g8 . First let him solve their own country problem and poke his nose in other countries .
ReplyDelete