Pages

Tuesday, November 24, 2009

போதை ஆசாமி விமானத்தில் பயணம் செய்ய தடை விதித்த தாய் ஏர்லைன்ஸ் விமானம் ?

சென்னையில் இருந்து பாங்காங் செல்லும் தாய் ஏர்லைன்ஸ் விமானம் நேற்றிரவு 12 மணிக்கு புறப்பட தயாராக நின்றது. பயணிகள் அனைவரும் சோதனைக்குப்பிறகு விமானத்தில் ஏறிக்கொண்டிருந்தனர்.

தென் கொரியா நாட்டைச் சேர்ந்த ஜிம்சன் என்ற பயணி தள்ளாடியபடி விமானம் ஏற வந்தார். அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்திருந்தார்.

தமிழ்நாட்டை சுற்றிப்பார்க்க வந்திருந்த ஜிம்சன் நிற்க கூட முடியாத அளவுக்கு அதிக போதையில் இருந்ததாக தெரிகிறது. இதனால் அதிருப்தி அடைந்த தாய் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் அவரை விமானத்தில் ஏற்ற மறுத்தனர்.

பாங்காங் செல்லும் வழியில் விமானத்தில் மது கொடுப்பார்கள் என்பதால் ஏற்கனவே அதிக போதையில் இருப்பவரை ஏற்றிச்செல்ல முடியாது என்று அதிகாரிகள் திட்டவட்டமாக கூறினார்கள். இதை ஏற்க மறுத்து ஜிம்சன் கடும் வாக்குவாதம் செய்தார். இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஜிம்சனை சில அதிகாரிகள் சமரசம் செய்தனர். அதிக போதையில் பயணம் செய்வது நல்லது அல்ல என்று அறிவுறுத்தினார்கள். நீண்ட நேரத்துக்கு பிறகு ஜிம்சன் சமரசமானார்.

இதையடுத்து ஜிம்சனை மட்டும் விட்டு விட்டு தாய் ஏர்லைன்ஸ் விமானம் பாங்காங் புறப்பட்டுச் சென்றது. சென்னை ஓட்டலில் ஜிம்சன் தங்க வைக்கப்பட்டுள்ளார்.


இன்றிரவு 12.15 மணிக்கு பாங்காங் செல்லும் விமானத்தில் ஜிம்சன் ஏற்றி அனுப்பி வைக்கப்படுவார்.

No comments:

Post a Comment