சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன அதிபர் ராமலிங்க ராஜூ மோசடி மூலம் கோடிக்கணக்கான பணத்தை சுருட்டினார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள செஞ்சல்குடா ஜெயலில் அடைக்கப்பட்டார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அங்குள்ள நிம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ராமலிங்க ராஜூ ரூ.7800 கோடி மோசடி செய்ததாக கடந்த ஏப்ரல் மாதம் தாக்கல் செய்யப்பட்ட முதல் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ராமலிங்க ராஜூ மோசடி தொடர்பாக 2-வது குற்றப்பத்திரிகையை நேற்று ஐதராபாத் மெட்ரோ பாலிட்டன் கோர்ட்டில் சி.பி.ஐ. டி.ஐ.ஜி. லட்சுமிநாராயணன் தாக்கல் செய்தார். இந்த குற்றப்பத்திரிகை 200பக்கங்களை கொண்டது.
ராமலிங்கராஜூ போலி பத்திரம் மூலம் வங்கியில் ரூ.1220 கோடி கடன் வாங்கியுள்ளார். இதனால் சத்யம் கம்பெனி பங்குதாரர்களுக்கு ரூ.14ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் அவர் ரூ.350 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளதாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. அவருக்கு சொந்தமாக 6ஆயிரம் ஏக்கர் நிலம், 40ஆயிரம் சதுரஅடி வீட்டுமனை, 90ஆயிரம் சதுர அடியில் கட்டிடங்கள் போன்ற 1065 சொத்துக்கள் உள்ளன. இவையும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நிம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள ராமலிங்க ராஜூவுக்கு கல்லீரல் வீக்கம் நோய் இருப்பதை டாக்டர்கள் கண்டு பிடித்தனர். இதற்கு சிகிச்சை அளிக்க ரூ.8லட்சம் செலவாகும். இந்த சிகிச்சைக்கான செலவை ஏற்க சிறைத்துறை அதிகாரிகள் மறுத்தனர்.
சிகிச்சை செலவை தானே ஏற்பதாக ராமலிங்க ராஜூவின் மனைவி நந்தினி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் சிறைத்துறை இயக்குனர் லோகேந்திர சர்மாவிடம் மனு கொடுத்துள்ளார்.
Wednesday, November 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment