தற்போது மெக்கா, மற்றும் மெதினா நகரங்களில் லட்சக்கணக்கானவர்கள் திரண்டுள்ளனர். இவர்களுக்கு உலகையே அச்சுறுத்தி வரும் பன்றிக்காய்ச்சல் நோய் இருக்கிறதா? என்பதை அறிய பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக பல மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பரிசோதனையில் பன்றிக்காய்ச்சல் நோய் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்ட 20 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் சிகிச்சை பலனின்றி 4 பேர் பலியானார்கள்.

இவர்களில் இந்தியரும் ஒருவர். இவர் தவிர சூடான், மொராக்கோ நாட்டை சேர்ந்தவரும் அடங்குவர். இவர்கள் அனைவரும் 75 வயதுக்காரர்கள். மேலும் நைஜீரியாவை சேர்ந்த 17 வயது பெண்ணும் பன்றிக் காய்ச்சலுக்கு பலியாகி உள்ளார்.
பன்றிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த 12 பேர் சிகிச்சைக்கு பின் குணம் அடைந்தனர். மேலும் 4 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பன்றிக் காய்ச்சலுக்கு ஹஜ் பயணிகள் பலியானதை தொடர்ந்து யாத்திரை வரும் பயணிகளிடம் உடல் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமானம் மற்றும் கப்பல் மூலம் ஜெட்டா வருபவர்களுக்கு தெர்மல் காமிராக்கள் மூலம் பரிசோதனை நடத்தப்படுகிறது.
நோய் தடுப்பு நடவடிக்கையில் சவுதிஅரேபியாவின் சுகாதார துறை தீவிரமாக உள்ளது. பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்துகளும் பெருமளவில் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சவுதி அரேபிய சுகாதார மந்திரியின் செய்தி தொடர்பாளர் காலத்அல், மார்கலானி தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 6,750 பேர் பலியாகி உள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment