Pages

Sunday, November 22, 2009

"டிவி'அலுவலகம் மீது தாக்குதல்

"டிவி'அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக, சிவசேனா கட்சியைச் சேர்ந்த 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். "தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, இந்திய பத்திரிகையாளர் சங்கம் (ஐ.என்.எஸ்.,)வலியுறுத்தியுள்ளது.மும்பையில், பிரபலமான மராத்தி "டிவி' செய்தி சேனல் ஐ.பி.என் - லோக்மத். இந்த "டிவி'அலுவலகத்திற்குள் நேற்று முன்தினம் புகுந்த சிலர், அங்குள்ள ஊழியர்களை கடுமையாக தாக்கினர். அலுவலகத்தையும் உடைத்துச் சேதப்படுத்தினர். தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.



இதையடுத்து, தாக்குதல் நடத்தியது தொடர்பாக, பிரவீண் பல்தேவ், நரேஷ் ரமேஷ் உட்பட சிவசேனா கட்சியைச் சேர்ந்த 17 பேரை, மும்பை போலீசார் நேற்று கைது செய்தனர். கலவரத்தில் ஈடுபடுதல், கொலை முயற்சி ஆகிய வழக்குகள் இவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.இதற்கிடையே, "டிவி'அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு இந்திய பத்திரிகையாளர் சங்கம் மற்றும் எடிட்டர்ஸ் கில்டு சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. "இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'என, மகாராஷ்டிரா அரசை எடிட்டர்ஸ் கில்டு வலியுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment