Pages

Monday, November 2, 2009

வடகரை வேலனின் யதார்த்தமான கேள்வி

மறக்க முடியாத இரு இதழ்கள் மயன் மற்றும் திசைகள்.(பதிவர்கள் யாரிடமாவது இதன் பிரதிகள் இருக்குமா?) மயனில் சுஜாதா எழுதிய கம்ப்யூட்டரை எளிதாகக் கற்றுக் கொள்ளுங்கள் கட்டுரை கம்ப்யூட்டர் பற்றிய ஆர்வத்தைத் தூண்டியது. பைனரியை எளிதாகச் சொல்லித்தர இரண்டு டம்ளர்களை உபயோகப்ப்டுத்தியிருப்பார். திசைகள் வித்தியாசமான பத்திரிக்கை. இளைஞர்களைக் குறி வைத்து சாவி நடத்தியது. மயன் இதயம் பேசுகிறது மணியன் நடத்தியது. கொஞ்ச காலமே வந்தாலும் இவ்விரு பத்திரிக்கைகளும் ஏற்படுத்திய பாதிப்பு அதிகம். திசைகள் பத்திரிக்கையிலிருந்து உருவானவர்களில் மாலனும், இயக்குனர் வசந்தும் ஞாபமிருக்கிறார்கள் மற்றவர்கள் பற்றித் தெரியவில்லை. சுப்ரஜா, சாருப்பிரபா சுந்தர், இரவிச்சந்திரன் எல்லாம் என்ன ஆனார்கள் ?

மாலன் மறந்ததை நீங்கள் நினைவில் வைத்திருப்பது பெரிய விழயம் .மிக உயரத்துக்கு போகும் குப்பைகள் கோபுரத்தில் ஒட்டி கொள்ளும் . காற்று அடித்தால் மீண்டும் கிழே விழும் .

சுப்ரஜா

No comments:

Post a Comment