விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி கட்டப் போரின் போது, மனித உரிமை மீறல்கள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதனடிப்படையில், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் சகோதரரும், பாதுகாப்பு செயலருமான கோத்தபய ராஜபக்ஷே மீது அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை போர்க்குற்ற விசாரணையை துவங்கியுள்ளது.
இந்த விசாரணை தொடர்பாக, தற்போது அமெரிக்காவில் தங்கியுள்ள, இலங்கையின் அப்போதைய ராணுவ தளபதியும், இப்போது முப்படைகளின் கூட்டுத் தளபதியுமாக இருப்பவருமான சரத்பொன்சேகாவுக்கு அமெரிக்க அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த விசாரணை நாளை ஒகலகாமாவில் நடைபெறவுள்ளது.இந்நிலையில், சரத் பொன்சேகாவிடம் அமெரிக்கா விசாரணை நடத்துவதை அனுமதிக்க முடியாது என, இலங்கை வெளியுறவு அமைச்சர் பொகலகாமா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் மேலும் கூறியதாவது:சரத் பொன்சேகாவைப் பொறுத்தவரையில், தேசிய பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை மூன்றாம் நாடுகளிடம் தெரிவிக்க முடியாது. இந்த சந்திப்பு நடக்கக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிட எந்த உரிமையும் இல்லை. அதுபோலவே, இலங்கை அரசின் அனுமதியின்றி சரத்பொன்சேகா, தன்னிச்சையாக எந்தவிதமான தகவல்களையும் தந்துவிடமுடியாது.இலங்கையின் பாதுகாப்பு மற்றும் மக்கள் நலனுக்கு எதிராக அமெரிக்காவின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இது போன்ற சட்டவிரோதமான நடவடிக்கைகளை இலங்கை அரசு ஒருபோதும் அனுமதிக்காது. சரத்பொன்சேகாவுக்கு தேவைப் படும் சட்ட உதவிகள் அனைத்தும் வழங்கப்படும்.இவ்வாறு பொகலகாமா கூறினார்.

இப்பொழுதாவது உலக நாடுகள் ஸ்ரீலங்காவின் உண்மை நிலைமையை புரிந்து கொள்ளுமா ? அமெரிக்காவை எதிர்ப்பதின் மூலம் அமெரிக்க ராணுவம் உள்ளே நுழைய கதவை திறக்க போகிறதா ஸ்ரீலங்கா .
-நக்கல் நாகராசன்
No comments:
Post a Comment