Thursday, December 24, 2009
மயானமான தே.மு.தி.க., தலைமை அலுவலகம்
இடைத்தேர்தல் தோல்வியால் தே.மு.தி.க., தலைமை அலுவலகம் நேற்று வெறிச்சோடிக் கிடந்தது.சென்னை, கோயம்பேடு நூறடிச்சாலையில் தே.மு.தி.க., தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. நேற்று திருச்செந்தூர், வந்தவாசி தொகுதி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடந்த நிலையில், கட்சி அலுவலகத்திற்கு, விஜயகாந்த் வரவில்லை. தேர்தல் முடிவு இப்படி தான் இருக்கும் என அறிந்தது போல் கட்சி மாநில, மாவட்ட நிர்வாகிகள் மட்டுமின்றி தொண்டர்களும் அங்கு வரவில்லை. தேர்தல் தோல்வி குறித்து கருத்து கேட்பதற்காக "டிவி', பத்திரிகை நிருபர்கள் பலர் தே.மு.தி.க., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.ஆனால் கருத்து சொல்ல அங்கு யாரும் இல்லாததால், அவர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
What a pity.Cinewallas thing they can become like M.G.R.NO one can enter or win in hereafter in Tamilnadu from Cinema.No doubt about this.They can't compete the local politicians and also their mass will vote for them.That mass is differnet and this mass is differnt.I really pity for Captain Vijayakanth.Tamilnilavan,kualalumpur, Malaysia.
ReplyDelete