இந்த படத்துக்காக விகாரபாத்தில் ரூ.2 கோடி செலவில் ராஜஸ்தான் மாநில கிராமிய சூழ்நிலையை பிரதிபலிக்கும் செட் போடப்பட்டிருந்தது. கடந்த ஒரு மாதமாக நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் அரும்பாடுபட்டு அந்த கிராமிய அரங்கை உருவாக்கி இருந்தனர்.
நேற்று காலை படப்பிடிப்பு தொடங்கும் முன்பு தெலுங்கானா ஆதரவு போராட்டக்காரர்கள் சிலர் அங்கு வந்தனர். மண்எண்ணை ஊற்றி படப்பிடிப்பு அரங்குக்கு தீ வைத்தனர். இதில் ரூ.2 கோடி செட் முழுமையாக எரிந்து நாசமானது.
படப்பிடிப்பு அரங்குக்குள் நிறுத்தப்பட்டிருந்த குவாலிஸ், லாரி, கார்களும் எரிந்து சேதமடைந்தது.
இதற்கிடையே நடிகர் மோகன்பாபுவின் பள்ளிக்கூடம் ஒன்றையும் போராட்டக்காரர்கள் அடித்து சூறையாடினார்கள். இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தெலுங்கானா போராட்டக்காரர்களால் சினிமா தியேட்டர்கள், படப்பிடிப்பு அரங்குகள் தீ வைத்து எரிக்கப்பட்டதற்கு ஆந்திரா பிலிம் சேம்பர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பிலிம் சேம்பர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சினிமா தொழில் எந்த அரசியல் கட்சி யையும் சேராதது. லட்சக்கணக்கானவர்கள் சினிமா தொழிலில் உள்ளனர். எனவே இனியும் திரை உலகம் மீது தாக்குதல் நடத் தப்படுவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment