புகாரின் பேரில் உதவி போலீஸ் கமிஷனர் கண்ண பிரான் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். ஹேமலதாவுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது.
சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து தலைமறைவாகிவிட்டார். இன்று மதியம் 12 மணிக்குள் ஆஜராக வேண்டும் என்று சாமியார் வீட்டில் சம்மன் நோட்டீசும் ஒட்டப்பட்டது.
ஆனால் சாமியார் போலீசாரின் எந்த உத்தரவுக்கும் வளைந்து கொடுக்கவில்லை. இலவுகாத்த கிளியாக ஏமாந்து போன போலீசார் சாமியாரை கைது செய்தாவது விசாரணைக்கு அழைத்து வர வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர்.
அவரது செல்போன் மூலம் துப்பு துலக்கிய போலீசார் சாமியார் பெங்களூரில் பதுங்கி இருப்பதை கண்டுபிடித்தனர். அவரை சுற்றி வளைக்க தனிப்படை பெங்களூர் விரைந்தது. அங்கு முகாமிட்டு சாமியார் ஸ்ரீகுமாரை தேடிவருகின்றனர்.
தற்கிடையே சாமியார் நாளை கோர்ட்டில் ஆஜராகி முன் ஜாமீன் பெற்றுக்கொண்டு போலீசில் ஆஜராவது இல்லாவிட்டால் கோர்ட்டில் சரண் அடைந்து விசாரணைக்கு ஒத்துழைப்பது என்று முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அவர் மத்திய அரசின் ஆலோசனை குழு உறுப்பினர் பதவிக்கு போலீஸ் நடவடிக்கையால் ஆபத்து வந்து விடக்கூடாது என்பதால் சாமியார் தலைமறைவாக சுற்றி திரிவது தெரிய வந்துள்ளது. மேலும் தனது ஆதரவாளர்கள் மூலம் ஹேமலதாவிடம் சமாதானம் பேசி வருவதாகவும், இன்னும் ஒரு சில தினங்களில் இந்த வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்படும் என்றும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment