Pages

Monday, December 28, 2009

கமலின் புதிய படத்தில் மாதவன் ஸ்ருதி ஹாசன்



கமல், ஸ்ருதி, கவுதமி புதுப்படம் மூலம் இணைகின்றனர். கமலின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் நிறுவனமே இதை தயாரிக்கிறது. கமல் வித்தியாசமான காமெடி கேரக்டரில் நடிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

இதில் டைரக்டர் கே.பாலசந்தர், மாதவன் ஆகியோரும் நடிக்கின்றனர். ஏற்கனவே குரு பாலசந்தரை நடிக்க வைக்க பேசி வருவதாக கமல் கூறி இருந்தார். அது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது.

பாலசந்தர் ஆரம்பத்தில் படங்களில் நடிப்பதை தவிர்த்தார். ஆனால் தற்போது தாமிரா இயக்கும் ரெட்டைச்சுழி மற்றும் சொந்த பேனரில் தயாரிக்கும் முறியடி படங்களில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதன் தொடர்ச்சியாக கமல்படத்தில் நடிக்கவும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

மாதவன் கேரக்டரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த படத்தை கவுதமி இயக்குவார் என்று பேச்சு அடிபடுகிறது. அவரிடம் கேட்டபோது “இதையெல்லாம் நினைத்து பார்க்கவே முடியவில்லை. சினிமா எடுப்பதற்கான என் திறமையை நீரூபிக்க நீண்ட தூரம் போக வேண்டியது உள்ளது. பாலசந்தர்சாரை நான் டைரக்டு செய்கிறேன் என்பதெல்லாம் கற்பனை செய்து பார்க்க முடியாதது” என்றார்.

இப்படத்துக்கு கமல் மகள் ஸ்ருதி இசையமைக்கிறார். இவர் “உன்னைப்போல் ஒருவன்” படத்துக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment