Pages

Sunday, December 27, 2009

ஹிந்தியில் நடிக்க விருப்பம்

மகாதீரா தெலுங்கு படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க விரும்பும் காஜல் அகர்வால் "'மகாதீரா' தெலுங்கில் சூப்பர் ஹிட்டான படம். இதை இந்தியில் தயாரிக்க முயற்சி நடக்கிறது. தெலுங்கை தொடர்ந்து இந்தியிலும் நான் நடிக்க உள்ளதாக கூறுகின்றனர். இது பற்றி எனக்கே தெரியாது. இதுவரை யாரும் என்னை இந்தி படத்துக்காக தொடர்பும் கொள்ளவில்லை. அதே நேரம் இந்தியில் இந்த வேடத்தை ஏற்க விரும்புகிறேன். தெலுங்கில் என்னுடன் ராம்சரண் தேஜா நடித்திருந்தார். அவரும் இந்தியில் நடிப்பாரா எனக் கேட்கிறார்கள். அது பற்றி எனக்கு தெரியாது. நாங்கள் இருவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் மட்டும் நண்பர்களாக இருந்தோம். சமீபத்தில் வெளியான 'ஆர்யா 2'படம் நன்றாக ஓடிக்கொண்டிருந்தது. தெலங்கானா பிரச்னை காரணமாக இப்படம் ஓடும் தியேட்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது எனது மனதை மிகவும் பாதித்தது. வருத்தமாக உள்ளேன். இப்போது கார்த்தி ஜோடியாக நான் மகான் அல்ல, தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் ஒரு படத்தில் நடிக்கிறேன்.

No comments:

Post a Comment