Pages

Sunday, December 27, 2009

தாய்லாந்து போலீசார் தந்திரம் பரிசு விழுந்ததாக கூறி குற்றவாளிகளை பிடித்தனர்

தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை பிடிக்க ஒரு நிறுவனம் சார்பில் பரிசு விழுந்திருப்பதாக கடிதம் அனுப்பி, அதைப் பெற வந்தபோது தாய்லாந்து போலீசார் கைது செய்துள்ளனர்.தாய்லாந்தில் பாலியல் பலாத்காரம், திருட்டு உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் பலர் தலைமறைவாக உள்ளனர். பல முறை முயற்சி செய்தும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், தேடப்படும் குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக போலீசார் ஒரு நூதன முயற்சியை மேற்கொண்டனர். இதன் ஒரு பகுதியாக, பாங்காக் நகரைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான குற்றவாளிகளின் சொந்த முகவரிக்கு பரிசு விழுந்திருப்பதாக பிரபல நிறுவனம் சார்பில் போலீசார் கடிதம் அனுப்பினர். செல்போன் நம்பர் மற்றும் தேசிய அடையாள அட்டை எண் அடிப்படையில் அவர்கள் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் டிவி, ரொக்கப் பணம் பரிசாக விழுந்திருப்பதாகவும் குறிப்பிட்ட முகவரியில் வந்து வாங்கிக் கொள்ளலாம் என்றும் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. பரிசு விவரம் குறித்து, தலைமறைவாக இருந்த குற்றவாளிகளுக்கு அவர்களது குடும்பத்தினர் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். குற்றவாளிகளை நம்ப வைப்பதற்காக அவர்கள் இருக்கும் பகுதியில் உள்ள மேலும் பல பேருக்கும் பரிசு விழுந்திருப்பதாக கடிதம் அனுப்பினர். குற்றவாளிகளை மட்டும் தனியாக ஒரு இடத்துக்கு வரவழைத்தனர். பரிசு கடிதத்தை உண்மை என நம்பிய குற்றவாளிகள் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த இடத்துக்கு காரில் வந்து இறங்கினர். கடிதத்தை கையில் எடுத்துக் கொண்டு பரிசை வாங்க சம்பந்தப்பட்ட அலுவகத்தில் நுழைந்தனர். அவர்களை பக்கத்து அறையில் காத்திருக்குமாறு அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். பரிசை வாங்கிச் செல்லலாம் என சந்தோஷமாக காத்திருந்த கிரிமினல்களை, மறைந்திருந்த போலீசார் பாய்ந்து வந¢து கைது செய்தனர்.இதுகுறித்து, காவல் துறை உயர் அதிகாரி கிரிசாதா கூறுகையில் "இந்த முயற்சியினால் குற்றவாளிகள் சிக்குவார்கள் என்ற நம்பிக்கை குறைவாகவே இருந்தது. எனினும், எங்களது வலையில் 14 பேர் சிக்கி உள்ளதன் மூலம் இந்த முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது " என்றார்.

No comments:

Post a Comment