Thursday, December 24, 2009
சூப்பர் மோசடி - போலீஸ் துணையில்லாமல் நடக்குமா ?
விருதுநகரில் 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த நிதி நிறுவனத்தை, கண்ணீருடன் மக்கள் முற்றுகையிட்டனர். நிதி நிறுவன பங்குதாரர் விஜயகுமார் உட்பட இருவரை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விருதுநகரைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரும், குமாரலிங்கபுரம் சீனிவாசன் என்பவரும் புல்லலக்கோட்டை ரோடு விக்னேஷ் காலனியிலுள்ள ஒரு மாடியில், கோல்ட் பவர் மார்க்கெட்டிங்(பி)லிட்., என்ற பெயரில் நிதி நிறுவனத்தை சில மாதங்களுக்கு முன் துவக்கினர்.
இந்த நிதி நிறுவனத்தில் 5,000 ரூபாய் கட்டினால், ஐந்து மாதத்துக்கு 3,350 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது என்ற தகவல் மக்களிடையே பரவியது.இதனால், தினமும் நூற்றுக்கணக்கான பேர் நிதி நிறுவனத்தில் பணம் கட்டினர். முதலில் பணம் செலுத்தி யவர்களுக்கு பணம் வழங்கப்பட்டது. நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தியவர் களுக்கு சரியாகப் பணம் வழங்கப்படவில்லை என நேற்று முன்தினம் தகவல் பரவியது. நேற்று காலையிலிருந்தே நிதி நிறுவனம் முன், பணம் போட்டவர்கள் அதிகளவில் கூடினர்.
இதையடுத்து, அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.டி.எஸ்.பி., பிச்சை, பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பெரியகாளை, எஸ்.ஐ.க்கள் கவுசல்யா, தேவமாதா ஆகியோர், அலுவலகத்தில் இருந்த பங்குதாரரர் விஜயகுமாரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்திருப்பதாக தெரிய வந்தது.இதையடுத்து போலீசார், வெளியே நின்ற ஒருவரை அழைத்து வந்து விஜயகுமாரிடம் பேச அனுமதித்தனர்.
அவர் வெளியே வந்து கூடியிருந்தவர்களிடம், "நிதி நிறுவனத்தில் பணம் இல்லை. நவ., 17க்கு பின் பணம் செலுத்தியவர்களின் விவரங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப் படவில்லை. ஜன., 18ல் பணம்வழங்க இயலாது" என விஜயகுமார் கூறியதாக தெரிவித்தார். இதையடுத்து, பணம் கட்டிய சரவணபாண்டியன், தாமோதரன் ஆகியோர், பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். விஜயகுமாரை, போலீசார் கைது செய்தனர்.
நேற்றிரவு நிதி நிறுவனம் நடத்திய மற்றொருவரான சீனிவாசனையும் போலீசார் கைது செய்தனர்."ஆசை' கண்ணை மறைக்குது: கூலி வேலை பார்ப்பவர்கள் 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை செலுத்தி உள்ளனர். ஆனால், போலீஸ், வக்கீல், ஆசிரியர்கள் பாகுபாடின்றி 10 லட்சம், 20 லட்சம் ரூபாய் கட்டியுள்ளனர். குறைந்த நாளில் நிறைய பணம் பார்க்கும், "ஆசை'யால் இவர்கள் ஏமாந்து நிற்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment