Pages

Sunday, December 27, 2009

ரூ. 44.50 கோடிக்கு மதுபானம்

கேரளாவில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ரூ. 44.50 கோடிக்கு மதுபானம் விற்கப்பட்டுள்ளது.
ரம், பீர், விஸ்கி போன்ற இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்களை கேரள மதுபான விற்பனைக் கழகம் சில்லறை விற்பனைக் கடைகள் மூலம் விற்பனை செய்து வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 337 சில்லறை கடைகளை நிறுவியுள்ளது.
இந்த கடைகளில் கிறிஸ்துமஸ் விற்பனை கடந்த 24, 25ம் தேதிகளில் களைகட்டியது. மொத்தம் ரூ. 44.5 கோடி விற்பனை நடந்துள்ளது. இது அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகளில் நடந்தது மட்டுமே. பார், அரசு கேன்டீன், ராணுவ கேன்டீன்களில் நடந்த விற்பனையை கணக்கெடுத்தால் விற்பனை மதிப்பு கூடும்.
24ம் தேதி ரூ.22.15 கோடியும், கிறிஸ்துமஸ் தினத்தன்று ரூ.22.35 கோடிக்கும் மதுபானம் விற்பனையாகி உள்ளது. இதில் 60 சதவீதம் ரம் மது பானமும், 30 சதவீதம் பீரும் விற்பனை ஆகியுள்ளன. கேரளாவில் மது விற்பனை இதே வேகத்தில் சென்றால் மார்ச் மாதம் இறுதிக்குள் ரூ.5300 கோடியாக உயரும் என தகவல் தெரிவிக்கின்றன. 2005&06 நிதி ஆண்டில் ரூ.2635 கோடி விற்பனை ஆகி இருந்தது.

No comments:

Post a Comment