Pages

Saturday, December 26, 2009

செக்ஸ் புகாரில் சிக்கிய ஆந்திர கவர்னர் திவாரி நீக்கம்: மத்திய அரசு இன்று முடிவு

ஆந்திராவில் தெலுங்கானா பிரச்சினை தீபற்றி எரிந்து கொண்டிக்கும் நிலையில், அம்மாநில கவர்னர் என்.டி.திவாரி மீது “செக்ஸ்” குற்றச்சாட்டு எழுந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான என்.டி.திவாரி (வயது86) 1980, 90களில் இந்திய அரசியலின் உச்சத்தில் இருந்தார். ராஜிவ்காந்தி படுகொலைக்கு பிறகு 1991ல் இவர் தான் பிரதமராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது நடந்த தேர்தலில் 800 ஒட்டுகளில் தோல்வி அடைந்ததால் அவரால் அந்த உயரிய பதவிக்கு வர முடியாமல் போனது.

இந்திய அரசியல் தலைவர்களில் 2மாநிலங்களில் முதல்வராக இருந்த ஒரே நபர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு. 1976முதல் 1989 வரை உத்தரபிரதேச முதல்வராக 3தடவையும், உத்தரபிரதேசத்தில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் உருவாக்கப்பட்ட போது அம்மாநில முதல்வராக 2002 முதல் 2007 வரை இருந்தார். ராஜீவ் மந்திரிசபையில் நிதி, வர்த்தகம், வெளி யுறவுத்துறை என பல முக்கிய பொறுப்புகளையும் வகித்தார்.

கடந்த ஆண்டு அவர் ஆந்திரா கவர்னராக நியமிக்கப்பட்டார். வயதாகி விட்டதால் அவரால் சுறுசுறுப்பாக செயல்பட முடியவில்லை என்று பலரும் புகார் கூறினார்கள் என்றாலும் காங்கிரஸ் மேலிடத்தலைவர்கள் அதை கண்டு கொள்ளாமல் இருந்தனர்.

ரோகித் சர்மா என்ற வாலிபர் என் தந்தை என்.டி.திவாரி என்று கூறி சில ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பு ஏற்படுத்தினார். அவர் தொடர்ந்த வழக்கை டெல்லி கோர்ட்டு சமீபத்தில் தள்ளுபடி செய்தது. இதனால் அவர் நிம்மதி பெருமூச்சு விட்டார்.

இந்த நிலையில் ஆந்திரஜோதி ஏபிஎன் தொலைக் காட்சி சானல் நேற்று கவர்னர் என்.டி.திவாரி போன்ற தோற்றம் உடைய ஒருவர் 3பெண்களுடன் செக்ஸ் சல்லாபத்தில் ஈடுபட்டுள்ள காட்சிகளை ஒளிபரப்பியது.என்.டி.திவாரி மாதிரி இருப்பவர் படுத்து இருப்பது போலவும், அவர் அருகில் 3பெண்கள் நிர்வாணமாக இருப்பது போலவும் காட்சிகள் இருந்தன. அதில் 2பெண்களுக்கு 20வயதுக்குள் தான் இருக்கும்.

ஒரு பெண் அவர் மீது படுத்து இருப்பது போல காட்சி இடம் பெற்றிருந்தது.

ஏபிஎன்-ஆந்திர ஜோதி தொலைக்காட்சி சானல் அந்த செக்ஸ் காட்சிகளை நேற்று காலை 10மணி முதல் பல தடவை மீண்டும், மீண்டும் ஒளிபரப்பியது. அதோடு அந்த பெண்கள் யார் என்ற தகவல்களையும் வெளியிட்டது. என்.டி. திவாரியின் சொந்த மாநிலமான உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த ராதிகா என்ற பெண் காண்டிராக்டர் ஆந்திராவில் சில கனிம சுரங்கங்களை குத்தகைக்கு எடுக்க கவர்னரின் தயவை நாடி, இந்த 3பெண்களையும் செக்ஸ் உல்லாசத்துக்கு அனுப்பியதாக அந்த தொலைக்காட்சி கூறியது.

அது மட்டுமின்றி கவர்னர் மாளிகை உயர் அதிகாரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கும் ராதிகா, விபசார பெண்களை சப்ளை செய்துள்ளதாக கூறப்படுகிறது. கவர்னர் என்.டி.திவாரி செக்ஸ் அனுபவித்து விட்டு, கனிம சுரங்கம் குத்தகை பெற உதவிகள் செய்யாததால், இந்த காட்சிகளை ராதிகாவே வெளியிட்டு அம்பலப்படுத்தி இருப்பதாக ஆந்திரா தொலைக்காட்சி கூறியுள்ளது. இந்த தகவல்களை கேட்டதும் ஆந்திர மக்களும், அரசியல் தலைவர்களும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

கவர்னரா இப்படி? என்ற கொந்தளிப்பும் மக்களிடையே ஏற்பட்டது. பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

என்.டி.திவாரி மீது எழுந்துள்ள செக்ஸ் குற்றச்சாட்டுக்கள் காங்கிரஸ் மேலிட தலைவர்களை கடும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே ஒரு தடவை என்.டி.திவாரி செக்ஸ் குற்றச்சாட்டில் ஈடுபட்டு மீண்டவர் என்பதால், அவர் மீது காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் எல்லாருமே சந்தேக கண்கொண்டு தான் பார்க்கிறார்கள். எனவே கவர்னர் பதவியில் இருந்து உடனடியாக அவரை நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியாவை வற்புறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் ஆந்திர மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும், என்.டி.திவாரியை மாற்றுங்கள் என்று குரல் எழுப்பியுள்ளனர். தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபுநாயுடு, பிரஜா ராஜ்ஜியம் கட்சித்தலைவர் சிரஞ்சீவி மற்றும் இடதுசாரி கட்சித்தலைவர்கள் திவாரியை உடனடியாக ஆந்திராவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர்களும் டெல்லி தலைவர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். என்.டி.திவாரியை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள் என்று வற்புறுத்தியுள்ளனர். இதையடுத்து என்.டி.திவாரியை கவர்னர் பதவியில் இருந்து விலக்க சோனியா முடிவு செய்துள்ளார்.

என்.டி.திவாரி நீக்கப்படுவது இன்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திவாரியை நீக்காவிட்டால் காங்கிரஸ் கட்சிக்கு மக்க ளிடம் உள்ள நல்ல பெயருக்கு இழுக்கு ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

என்.டி.திவாரி மீது சோனியா ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் அதிருப்தியுடன் தான் உள்ளார். மத்திய மந்திரியாக அங்கம் வகித்தபோது பல பிரச்சினைகளில் இவர் குடைச்சல் கொடுப்பவராக இருந்தார். வயதான பிறகு இவர் கவர்னர் பதவி வேண்டும் என்று கறாராக கேட்டபோதும், காங்கிரஸ் மூத்ததலைவர்கள் எரிச்சல் அடைந்தனர்.

ஆனால் கவர்னர் பதவியில் அவர் எதிர் பார்த்த அளவுக்கு திறம்பட செயல்படவில்லை. ராஜசேகரரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த பிறகு, அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவாளர்கள் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்திய போது, அந்த சூழ்நிலையை என்.டி.திவாரி சுமூகமாக கையாளவில்லை. அதுபற்றி அவர் கண்டு கொள்ளவே இல்லை.

அதுபோல தெலுங்கானா பிரச்சினை வெடித்து ஆந்திராவே அல்லோகலப்பட்டுக் கொண்டிக்கும் நிலையில், அதை தீர்த்து அமைதி ஏற்படுத்த அவர் சிறு நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. இது காங்கிரஸ் மேலிட தலைவர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் என்.டி. திவாரி மீது செக்ஸ் குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், ஒட்டு மொத்தமாக எல்லாரது வெறுப்பும், கோபமும் அவர் மீது ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment