Thursday, December 24, 2009
தரமற்ற ஆண் உறைகள் - மோசடி ?
அசாமில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ், மாநில அரசு வினியோகித்த 43 லட்சம் காண்டம்கள் தரமற்றவை என தெரியவந்துள்ளது. அசாம் மாநில அரசு தேசிய ஊரக சுகாதார திட்டத்தின் கீழ், குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை செயல் படுத்தி வருகிறது. மாநிலத்தில் மக்கள் குடும்ப கட்டுப்பாடு முறையை கடைபிடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில், பல வகையான கருத்தடை சாதனங்களை வினியோகித்து வருகிறது.
மக்களுக்கு வினியோகிக்க கடந்த ஆண்டில் 54.18 லட்சம் செலவில், 43 லட்சம் காண்டம்களை வாங்கியது. இந்த காண்டம்கள் மாவட்ட வாரியாக வினியோகிக்கப் பட்டன. அப்படி வினியோகம் செய்த காண்டம்கள் தரம் குறைந்தது என, ஆய்வில் தெரியவந்துள்ளது. இது சுகாதார திட்டத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு முன், 2007ம் ஆண்டில், 73.24 லட்சம் செலவில் கொள்முதல் செய்த 58 லட்சத்து 13ஆயிரம் காண்டம்களிலும். தரமற்ற காண்டம்கள் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. மாதிரிகளான 15 லட்சத்து 13 ஆயிரம் காண்டம்களை பரிசோதித்து பார்த்ததில், அவை அனைத்தும் தரமற்றவை என தெரிந்தது. இந்த தரமற்ற காண்டம்கள், தயாரிப்பு நிறுவனத்துக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment