
திறமையான நடிகை யார்? என்பதில் பத்மபிரியாவுக்கும் லட்சுமிராய்க்கும் போட்டி ஏற்பட்டு “இரும்புக்கோட்டை முரட்டுச்சிங்கம்” படப்பிடிப்பில் மோதிக்கொண்டனர்.
இந்த படத்தை சிம்புத் தேவன் இயக்குகிறார். இவர் வடிவேலை கதாநாயகனாக்கி “இம்மை அரசன் 23-ம் புலிகேசி” ஹிட் படத்தை எடுத்தவர். கதாநாயகனாக லாரன்ஸ் நடிக்கிறார். இது பழைய “ஹவ்பாய்” சாயலிலான கதை. அனைத்து நடிகர், நடிகைகளும் “ஹவ்பாய்” படங்களில் வரும் காஸ்ட்யும்களை அணிந்து நடித்துள்ளனர்.
பத்மபிரியா, லட்சுமிராய் இருவரும் இப்படத்தில் நடித்தபோது நான்தான் கதாநாயகி என்று இருவரும் மாறி மாறி சொல்லிக் கொண்டனர். இதுவே அவர்களுக்குள் கருத்து வேறுபாட்டை உருவாக்கியது. எனக்குத் தான் படத்தில் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று இயக்குனரையும் காய்ச்சி எடுத்தனர். இருவரையும் சமரசப்படுத்த முடியாமல் அவர் திணறினார்.
“மிருகம்”, “பொக்கிஷம்”, “தவமாய் தவமிருந்து” படங்கள் மூலம் என் திறமையான நடிப்பை நாடே அறியும் லட்சுமிராயால் அது போன்று நடிக்க முடிந்ததா? என்று படப்பிடிப்பில் சிலருடன் பத்மபிரியா பேசி உள்ளார். அது லட்சுமிராய் காதுக்கு போக நான்தான் அவரை விட திறமையான நடிகை என ஆவேசப்பட்டுள்ளார். இவர்களை ஒரு வழியாக சமாளித்து படப்பிடிப்பை முடித்தாராம் சிம்புதேவன். இதில் சந்தியாவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் “இரும்புக்கோட்டை முரட்டுச்சிங்கம்” படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதிலும் அவர்கள் பனிப்போரை காண முடிந்தது. பொதுவாக இது போன்ற பொது விழாக்களுக்கு லட்சுமிராய் கவர்ச்சி உடையில் வருவது உண்டு. அவருக்கு போட்டியாக பத்மபிரியா முதல் தடவையாக நமிதா ரேஞ்சுக்கு படுகவர்ச்சியான உடை அணிந்து வந்தார்.

No comments:
Post a Comment