Pages

Thursday, December 31, 2009

அன்னை தெரசா தபால் தலை


நோபல் பரிசு பெற்றவரான அன்னை தெரசா மற்றும் ஆஸ்கர் பரிசு பெற்ற நடிகை கேத்தரீன் ஹெபர்ன் ஆகியோரை கவுரவிக்கும் வகையில், 2010ம் ஆண்டு நினைவு தபால்தலை வெளியிட உள்ளதாக, அமெரிக்க தபால் துறை அறிவித்துள்ளது.


இதுகுறித்து அமெரிக்க தபால் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: அமெரிக்க தபால் துறை, பிரபலமானவர்கள், இடங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றை கவுரவிக்கும் வகையில் ஆண்டு தோறும் நினைவு தபால்தலை வெளியிடுவது வழக்கம். இந்த நினைவு தபால்தலைகள் குறிப்பிட்ட காலத்திற்கு விற்பனை செய்யப்படும். இதன்படி, நோபல் பரிசு பெற்ற கன்னியாஸ்திரியான அன்னை தெரசா, ஆஸ்கர் பரிசு பெற்ற நடிகையான கேத்தரீன் ஹெபர்ன், சிங்கிங் கவ்பாய் ஜீன் ஆட்ரி,வில்லியம் எஸ்.ஹார்ட், டாம் மிக்ஸ் மற்றும் ராய் ரோகர்ஸ் ஆகியோர் நினைவாக 2010ம் ஆண்டு, தபால் தலை வெளியிடப்பட உள்ளது. இந்தியாவில் உள்ள ஏழைகள் மற்றும் நோயாளிகளுக்காக, தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த, அன்னை தெரசாவின் நினைவாக வெளியிடப்பட உள்ள தபால்தலை, 2010 ஆகஸ்ட் 26ம் தேதி, அவரது பிறந்த நாள் முதல் விற்பனை செய்யப்பட உள்ளது. இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. அன்னை தெரசாவிருக்கு தபால் தலை வழங்க படுவது சந்தோஷத்தை அளிக்கும் செய்தி.

    ReplyDelete