ஒசாமா பின்லேடனின் 17 வயது மகள் ஈரானின் வீட்டுச் சிறையிலிருந்து தப்பி விட்டார். அவளுக்கு டெஹ்ரானில் உள்ள சவுதி தூதரகம் தஞ்சம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது.கடந்த 2001ம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் மீது அல்கொய்தா தீவிரவாதிகள் விமானங்களை மோதி தகர்த்தனர். இதையடுத்து, அந்த அமைப்பின் தலைவராக ஒசாமா பின்லேடனின் குடும்பத்தைச் சேர்ந்த பலர் ஆப்கனிலிருந்து வெளியேறி ஈரானில் நுழைய முற்பட்டனர். அப்போது, அவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், பின்லேடனின் மகள் இமான் மற்றும் 5 மகன்களும் அடங்குவர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இமான், நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற எண்ணத்தில் பாதுகாப்பு வீரர்களை ஏமாற்றிவிட்டு வீட்டுச் சிறையிலிருந்து தப்பித்து விட்டார். இவர் ஈரானின் டெஹ்ரானில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்தின் உதவியுடன் சவுதி அரேபியாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
"ஷாப்பிங் சென்றபோது இமான் தப்பிச் சென்றார். சவுதி தூதரகத்தின் உதவியுடன் ஈரானை விட்டு வெளியேறி இருக்கலாம். இப்போது, சிரியாவில் உள்ள எங்கள் அம்மாவுடன் இமான் சேர்ந்திருக்கலாம் " என பின்லேடன் மகன் ஓமர் தெரிவித்துள்ளார்.
Thursday, December 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment