அரியானாவில் 1999ம் ஆண்டில் இளம் டென்னிஸ் வீராங்கனையாக வளர்ந்து கொண்டிருந்த 14வயதான ருச்சிகா என்ற பள்ளி மாணவியை அப்போதைய போலீஸ் டி.ஜி.பி. ரத்தோர் மானபங்கம் செய்தார். இதை ருச்சிகா அம்பலப்படுத்தியதும் அவருடைய குடும்பத்தினர் மீது ரத்தோர் தனது அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டார். ருச்சிகாவை பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வைத்தார். அவருடைய சகோதரர் அஷு மீது திருட்டு உட்பட பல்வேறு வகையில் 11 பொய் வழக்குகளை போட வைத்தார்.
இந்த சித்ரவதைகளை தாங்க முடியாத ருச்சிகா, 1993ல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல் துறையின் தலைவராக இருந்ததால் ரத்தோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை. ருச்சிகாவின் பெற்றோர் ஒன்பது ஆண்டுகள் நடத்திய போராட்டத்துக்குப் பிறகு, 1999ல் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், அவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து விசாரிக்கும்படி கீழ் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், பஞ்சாப் மற்றும் அரியானா மாநில உயர் நீதிமன்றம் அதை ரத்து செய்தது.
கடந்த 19 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் சமீபத்தில்தான் ரத்தோருக்கு 6 மாத சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது. கொடுமையான குற்றத்துக்கு மிகவும் குறைந்த தண்டனை கொடுக்கப்பட்டதற்கு நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால், ருச்சிகா மானபங்க சம்பவம் பற்றி மறுவிசாரணை நடத்த அரியானா முதல்வர் பூபிந்தர் சிங் ஹோடா உத்தரவிட்டு இருக்கிறார்.
இந்த நிலையில், ருச்சிகாவை பழி வாங்குவதற்காக ரத்தோரின் உத்தரவுப்படி தங்கள் மகன் அஷு மீது போலீசார் பொய் வழக்குகள் போட்டதற்காக அரியானா அரசிடம் ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்க பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

( MODEL NOT THE AFFECTED ONE )
No comments:
Post a Comment