Pages

Sunday, December 27, 2009

குடிச்சிருக்கேன் ஆனா குடிக்கலை

பொதுவாக பிராந்தி, விஸ்கி, பீர் போன்ற மது வகைகள் ஆல்கஹால் மூலம் தயாரிக்கப்படுகிறது. இதனால்தான் மது குடித்தவர்கள் போதையில் மிதக்கிறார்கள்.

ஆல்கஹால் மூளையை தாக்குவதால் நரம்பு மண்டலம் தன் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக செயல்படுகிறது. இதனால் தள்ளாடுகிறார்கள். சமுதாயத்தில் அவமதிக்கப்படுகிறார்கள்.

இது போன்ற சம்பவங் களை தவிர்க்க போதை இல்லாத மது தயாரிக்கப்பட்டுள்ளது. இதை இங்கிலாந்து நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். லண்டன் இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானி பேராசிரியர் டேவிட் நட் தலைமையிலான குழு இதற்கான முயற்சியை மேற் கொண்டது.

மது தயாரிக்க பயன்படுத்தும் ஆல்கஹால் செயற்கையாக கண்டுபிடித்தனர். அது வலியம் என்ற ரசாயன பொருள் மூலம் தயாரிக்கப்பட்டது. இதன் மூலம் போதை இல்லாத மதுவை தயாரித்தனர்.

இந்த மதுவை குடித்தால் போதையோ, தள்ளாட்டமோ ஏற்படவில்லை. ஏனென்றால் இந்த ஆல்கஹால் மூளை நரம்புகளை பாதிப்பதில்லை. ஆனால் உடலில் ஒருவித சந்தோஷ புத்துணர்ச்சியை ஏற்படுத்தி மகிழ்ச்சியான நிலையில் வைத்திருக்க கூடியது.

இந்த ஆல்கஹால் மூலம் மது தயாரிக்கலாமா என்பது குறித்து போதை மருந்து நிபுணர்களின் கருத்தை அரசு கேட்டுள்ளது. இந்த வகை மதுக்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வரவேண்டும் என இங்கிலாந்து மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் மது குடித்து பயமின்றி “ஹாயாக” வாகனங்கள் ஓட்டிச்செல்லலாம். யாருக்கும் இடையூறு இன்றி மகிழ்ச்சியை அனுபவிக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment