தமிழ் திரையுலகை விட்டு இந்திக்கு போன மாதவனுக்கு இப்படம் பெரிய அங்கீகாரத்தை கொடுத்து முன்னணி நடிகராக உயர்த்தியுள்ளது. இனி அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வரும் என்கின்றனர்.
சென்னையில் அரங்கு நிறைந்த காட்சிகளாக "3 இடியட்ஸ்" படம் ஓடுகிறது. கல்லூரி மாணவ- மாணவிகள் இப்படத்தை பார்க்க முண்டியடிக்கிறார்கள். சென்னையில் 8 தியேட்டர்களில் திரையிடப்பட்டு உள்ளது.
"3 இடியட்ஸ்" படம் வெற்றிகரமாக ஓடுவது குறித்து மாதவன் " சென்னை ரசிகர்கள் “3 இடியட்ஸ்” படத்துக்கு அமோக வரவேற்பு அளித்தது அறிந்து மகிழ்ந்தேன். உலக அளவில் இப்படம் ஹிட்டாகியுள்ளது. எனது நண்பர்களுடன் சென்னை தியேட்டரில் இப்படத்தை பார்க்க ஆசைப்பட்டேன். ஆனால் வேறு பணிகள் இருந்ததால் வரமுடியவில்லை " என்றார்.

No comments:
Post a Comment