வில்லனாக அறிமுகமாகி கதாநாயகன் ஆனவர் கரண் "கமலின் “நம்மவர்” படத்தில் கிடைத்த அறிமுகம் ஆணிவேராக அமைந்தது. அவர் அஸ்திவாரத்தில் வீடு கட்டுகிறேன். என் வளர்ச்சிக்கு அவரே காரணம். என் முன்னேற்றத்தில் அக்கறையாக இருக்கிறார். என்னை எப்போதும் அவர் கண்காணிப்பதாக உணர்கிறேன். அந்த எச்சரிக்கை உணர்வு என்னை சரியான வழியில் நடத்துகிறது.
நான் கதாநாயகனாக நடித்து ஐந்து படங்கள் வந்துள்ளன. “கொக்கி” வழக்கமான சினிமாத் தனங்களை உடைத்து நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. “கருப்பசாமி குத்தகைதாரர்” மாறுபட்ட வேடம். “தீ நகர்”, “காத்தவராயன்”, “மலையன்” படங்களில் வெவ்வேறான கேரக்டர்களை வெளிப்படுத்தினேன்.
தற்போது “கனகவேல் காக்க”, “கந்தா”, “தம்பி வெட்டோத்தி சுந்தரம்” என 3 படங்கள் கைவசம் உள்ளன. என் படங்களுக்கு 10, 12 மாதம் ஆகிறது. இனி அது நிகழாது. ஆண்டுக்கு 3 அல்லது நான்கு படங்களில் நடிப்பேன். தெலுங்கில் வாய்ப்புகள் வருகின்றன. என்றாலும் தமிழில் கவனம் செலுத்துவதே விருப்பம். இரட்டை வேடத்தில் நடிக்கவும் ஆசை உள்ளது.
என்னுடன் நடித்த கதாநாயகிகள் எல்லோருமே எனக்கு பொருத்தமான ஜோடிதான்." என்றார் .
Tuesday, December 29, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment