Pages

Monday, December 28, 2009

எம் ஜி ஆர் கார்டனில் திருட்டு -கொடுமைடா சாமி


எம்.ஜி.ஆர்., கார்டனில் வசிக்கும் அவரது உறவினர் வீட்டில் திருமண "கிப்ட்' பொருட்கள் திருடுபோனது.நந்தம்பாக்கம் ராமாபுரத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில், எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியம்மாளின் தம்பி மருமகன் மதுமோகன் (54) அவரது மனைவி கீதா(50), குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.மதுமோகனின் மகன் ஆனந்துக்கு கடந்த 20ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கொடுத்த வெள்ளி, தங்க நாணயம் உள்ளிட்ட "கிப்ட்' பொருட்கள் ஒரு பீரோவிலும், மருமகளின் நூறு சவரன் நகைகள் மற்றும் பட்டுப்புடவைகள் மற்றொரு பீரோவிலும் வைத்திருந்தனர்.


திருமணம் முடிந்ததும், அவசர அவசரமாக வீட்டை பூட்டிவிட்டு கடந்த 21ம் தேதி முதல் 23 ம்தேதி வரை கடலூருக்கு சென்றனர். கடந்த 24ம் தேதி சென்னை திரும்பினர். பின் கடந்த 25ம் தேதி மீண்டும் குடும்பத்துடன் கேரளாவுக்கு சென்றனர். நேற்றுமுன்தினம் அனைவரும் வீடு திரும்பினர். அப்போது, வீட்டுக் கதவு பூட்டிய நிலையிலேயே இருந்தது.ஆனால், படுக்கையறையில் அமைக்கப்பட்டிருந்த கண்ணாடி ஜன்னலை அகற்றிவிட்டு, ஒரு பீரோவிலிருந்த இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள கிப்ட் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

No comments:

Post a Comment