சென்னை நுங்கம்பாக்கம் காம்தார்நகரை சேர்ந்தவர் சாமியார் ஈஸ்வரஸ்ரீகுமார். மத்திய அரசின் ஆலோசனை குழு உறுப்பினராக உள்ளார். இவர் மீது தேனாம்பேட்டை கிரியப்பா தெருவை சேர்ந்த ஹேமலதா என்ற பெண் கற்பழிப்பு புகார் கூறினார்.
மாம்பலம் உதவி போலீஸ் கமிஷனர் கண்ணபிரான் மேற்பார்வையில் இன்ஸ் பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகிறார். ஹேமலதாவிடம் விசாரித்து மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இதேபோல் சாமியாரிடம் விசாரித்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள போலீசார் முடிவு செய்தார்.
ஆனால் சாமியார் கடந்த 4நாட்களாக போலீசுக்கு தண்ணி காட்டி வருகிறார். முதலில் தலைமறைவாக வில்லை என்றவர் திருப்பதிக்கு சென்றார். அங்கிருந்து டெல்லி சென்றார். அங்கிருந்து மும்பை போனார். செல்போனை சுவிட்ஜ் ஆப்செய்யாமல் இருப்பதால் போன் மூலமாக தொடர்பு கொள்ள முடிந்தது. சாமியாருக்கு விசாரணைக்கு ஆஜராக 24மணிநேர கெடு விதித்தனர். இன்று காலையுடன் கெடு முடிந்தது. விசாரணைக்கு ஆஜராகாமல் கண்ணா மூச்சி ஆட்டம் கபிட்டினால் கைது செய்வோம். தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்போம் என்று எச்சரித்தனர்.
இதனால் அதிர்ந்துபோன சாமியார் ஈஸ்வரஸ்ரீகுமார் நான் மும்பையில் இருந்து ரெயில் மூலமாக சென்னை வந்து கொண்டிருக்கிறேன். மாலைக்குள் ரெயில் சென்னை வந்துவிடும் உடனடியாக மாம்பலம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விடுகிறேன் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய தவறு ஏதும் செய்யவில்லை. கைது செய்ய வேண்டாம் என்று அழுதார்.
சாமியார் தொடர்ந்து கொடுத்து வரும் தொல்லைகளால் நொந்து போயிருக்கும் போலீசார் அவரை கைது செய்து தக்க பாடம்புகட்ட இருப்பதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையே சாமியார் மனைவி லலிதா " குருஜி தவறு ஏதும் செய்யவில்லை என்றாலும் பெண்களுக்கு சட்டத்தில் சாதகமான இடம் உள்ளது. சம்பந்தப்பட்ட பெண் கூறுவது உண்மையா இல்லையா என்பதை ஆய்வு செய்ய வேண்டியது முக்கியம். ஹேமலதாவுக்கு பின்னணியில் நிலஅபகரிப்பு கும்பல் ஒன்று உள்ளது. அவர்களின் பணம் தான் அவரை கோர்ட்டு, போலீஸ் நிலையம் என்று பேச வைக்கிறது. ஒரு பெண் சாதாணமாக கற்பழிப்பு புகார் கொடுக்க முடியாது. ஒருவேளை குருஜி மேல் ஹேமலதாவுக்கு விருப்பம் (காதல்) ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழுகிறது.
குருஜி நல்லவர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவரை கைது செய்ய வைத்தே தீருவேன் என்று ஹேமலதா கூறி வருவதில் இருந்தே அவரது உள்நோக்கம் என்ன என்று புரிகிறது. அவரது பின்னணியில் உள்ள நிலஅபகரிப்பு கும்பலின் சதி தான் இந்த அவதூறு வழக்கு. சில சட்ட காரணங்களால் குருஜி போலீஸ் நிலையத்தில் ஆஜராகவில்லை. அடுத்து என்ன செய்யலாம் என்று ஆலோசித்து வருகிறோம் " என்றார்.
Monday, December 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment