
சமீபத்தில் சென்னையில் நடந்த பேஷன் ஷோவில் பல நடிகைகள் கலந்துகொண்டு, மேடையில் புது டிசைன் ஆடைகளை அறிமுகப்படுத்தினர்.
இது பற்றி இலியானா "மாடலாக இருந்தபோது பேஷன் ஷோக்களில் கலந்துகொண்டேன். அப்படி கலந்து கொண்டதால்தான் பட வாய்ப்பும் கிடைத்து. 2004&ம் ஆண்டுக்கு பின் பேஷன் ஷோக்களில் பங்கேற்க முடியவில்லை. காரணம், சினிமாவுக்கு வந்துவிட்டேன். சமீபத்தில் நடந்த ஷோவில் சன் கிளாஸை அறிமுகம் செய்ய மேடையில் நடந்து வந்தேன். இது சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருந்தது" என்றார். த்ரிஷா "சமீபத்தில் நடந்த பேஷன் நிகழ்ச்சியில் நடந்து வர எனது நண்பர் டிசைனர் சிட்னிதான் காரணம். சினிமாவுக்கு வந்த பின்பும் சில பேஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறேன். அது எல்லாமே சிட்னிக்காக"என்றார்.
No comments:
Post a Comment