Sunday, December 27, 2009
நீதிமன்றம் ரூ.98 லட்சம் அபராதம்
விலை உயர்ந்த மருந்துகளை அதிக தள்ளுபடியில் அளிப்பதாக கோடிக்கணக்கான பேருக்கு போலி மெயில் அனுப்பியவருக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் ரூ.98 லட்சம் அபராதம் விதித்துள்ளது.ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தைச் சேர்ந்தவர் லான்ஸ் தாமஸ். இவர் வயாக்ரா உட்பட விலையுயர்ந்த வாழ்க்கை முறை மருந்துகளை 80 சதவீதம் வரை தள்ளுபடியில் தருவதாக கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு இமெயில் அனுப்பி வந்தார்.அமெரிக்காவில் இருந்து சட்டரீதியாக வரவழைக்கப்பட்டு இந்த மருந்துகள் சப்ளை செய்வதாக பொய் தகவலையும் அளித்தார். இதுபோன்ற விரும்பத்தகாத மெயில்களை ஆஸ்திரேலியர்கள் பலர், இந்தியர்களுக்கு அனுப்பி வருவதும் தெரிய வந்துள்ளது.இந்தியாவை சேர்ந்த ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட கம்ப்யூட்டர் வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆஸ்திரேலிய மீடியா ஆணையத்துக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் லான்ஸ் தாமசின் லீலைகளை கண்டுபிடித்த ஆணையம், அவருக்கு எதிராக குயின்ஸ்லாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'சட்டவிரோதமாக போலி இமெயில்களை கோடிக்கணக்கான மெயில் முகவரிகளுக்கு அனுப்பிய குற்றத்துக்கு ரூ.98 லட்சம் அபராதம் செலுத்த' லான்ஸ் தாமசுக்கு உத்தரவிட்டது. இதே குற்றச்சாட்டில் லான்ஸ் தாமசின் சொத்துக்களை அமெரிக்க அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment