Pages

Thursday, December 24, 2009

பாலிவுட் ஒப்பந்தத்தை பார்த்து அதிரும் நம்ம ஊர் நாயகிகள்


அசின், த்ரிஷா, நயன்தாரா தமிழ் நாயகிகளின் வருகை அதிகமாகி விட்டதால் மும்பை ஏரியாவில் ஒரே கலவர மேகம். அடக்கி வாசிப்பார்கள். அடங்கியும் வாசிப்பார்கள் என்ற பயம் ஒருபுறம். சம்பள விஷயத்தில் தாராளம் காட்டி, மொத்த வாய்ப்பையும் தட்டி செல்கிற சாமர்த்தியம் கொண்டவர்களாக இருக்கிறார்களே என்ற கவலை இன்னொரு பக்கம். இப்படி அங்குள்ள முன்னணி ஹீரோயின்களுக்கே 'எனிமா' கொடுப்பதால் எல்லாரும் கூடி ஒரு தந்திரம் செய்திருக்கிறார்களாம். தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் சரிகட்டி, ஒப்பந்த விஷயத்தில் ஒரு தீப்பந்தம் கொளுத்தியிருக்கிறார்களாம். இந்த ஒப்பந்த நகலை பார்த்து ஒரேயடியாக அதிர்ந்து போயிருக்கிறார்கள் நம்ம ஊர் நாயகிகள். அப்படியென்ன இருக்கிறதாம் அதில்? 'படத்தில் கவர்ச்சியாக நடிக்க எங்களுக்கு முழு சம்மதம்' என்று ஒரு வரி சேர்க்கப்படுகிறதாம். இந்த கவர்ச்சி எதுவரைக்கும் என்ற எந்த கோட்பாடும் அதில் குறிக்கப்படாததுதான் முக்கியமான சிக்கல். இதை வைத்தே நம்மை உரித்து எடுத்துவிடுவார்களே என்ற அச்சம்தான் இவர்களை பாடாய் படுத்துகிறதாம்.

No comments:

Post a Comment