டெட்ராய்ட் நகருக்கு வந்த அமெரிக்க விமானத்தை தகர்க்க நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அமெரிக்க விமானங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருக்கும் அமெரிக்கர்களுக்கும் அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த வகையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் அமெரிக்கர்களுக்கும் சில எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
இது குறித்து ஒபாமா அரசு விடுத்துள்ள அறிவிப்பு :
கடந்த ஆண்டு (2008) மும்பையில் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதே பாணியில் இந்தியாவில் மேலும் பல நகரங்களில் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
தனி தெலுங்கானா மாநிலம் கேட்டு ஆந்திராவில் கலவரமும் அதைத்தொடர்ந்து வன்முறையும் நடந்து வருகிறது. இதை பயன்படுத்தி தீவிரவாதிகள் அங்கு புகுந்து தாக்குதல் நடத்தலாம்.
பொதுவாக அவர்கள் அமெரிக்கர்கள் அல்லது மேலை நாட்டினர் (ஐரோப்பியர்கள்) மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். தற்கொலை படை தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளன.
மும்பை பாணியில் தாக்குதல் நடத்ததிட்டமிட்டுள்ளனர். எனவே, இந்தியாவில் இருக்கும் அமெரிக்கர்கள் பாதுகாப்புடன் பயணம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Wednesday, December 30, 2009
Subscribe to:
Post Comments (Atom)
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் .
ReplyDelete