Pages

Thursday, December 24, 2009

டில்லி ஓட்டல்கள் ரூ. 500 கோடிஅரசுக்கு வாடகை பாக்கி

"டில்லியில் அமைந்துள்ள எட்டு ஓட்டல்கள், அரசுக்கு செலுத்த வேண்டிய வாடகை, 500 கோடி ரூபாய்"என, இந்திய தணிக்கை துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. டில்லியில் அமைந்திருக்கும் ஓட்டல் லலித், சம்ரத் ஓட்டல், லீ மெரீடியன், தாஜ்மான் சிங், கிளாரிட்ஜ், அசோகா மற்றும் தாஜ் பாலஸ் உட்பட எட்டு ஓட்டல்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வாடகை பாக்கிகளை செலுத்தாமல் உள்ளன.


இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை:டில்லியில் அமைந்துள்ள 21 ஓட்டல்களுக்கு, நிலம் மற்றும் மேம்பாடு அலுவலகம் குத்தகை அடிப்படையில் நிலம் ஒதுக்கீடு செய்தது. தணிக்கை துறையின் வேண்டுகோளுக்கிணங்கி, நிலம் மற்றும் மேம்பாடு அலுவலகம், 11 ஓட்டல்களின் தகவல்களை கொடுத்துள்ளன. அவற்றில் எட்டு ஓட்டல்கள், 516 கோடி ரூபாய் செலுத்தாமல் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதே போன்று, இந்த ஓட்டல்களின், நில வாடகையும் பல ஆண்டுகளாக, மாற்றிய மைக்கப்படாமல் உள்ளது. உதாரணமாக லலித் ஓட்டலின் நில வாடகை ஆண்டுக்கு, 973 ரூபாய் என, 1977ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது. இந்த வாடகை அளவு இன்னும் மாற்றியமைக்கப்படவில்லை.மேலும், இந்த ஓட்டல், 304 கோடி ரூபாயை அரசுக்கு செலுத்தாமல் உள்ளது. இவ்வாறு அரசுக்கு செலுத்த வேண்டிய பணத்தை, முறையாக செலுத்துமாறு, 2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இறுதியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.


எல்லாம் சரி ! தேர்தல் செலவுக்கு அவங்க கொடுத்ததை ஒரு கணக்கு வச்சுருப்பாங்க இல்ல?அதை அவங்க வெளியிட்ட என்ன ஆகும்.போங்கடா நீங்களும் உங்க அரசியலும் ?
- நக்கல் நாகராசன்

No comments:

Post a Comment