Pages

Thursday, December 24, 2009

இந்துவாக அங்கீகரிக்க கோரி கோர்ட்டில் மனு


மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவழி பெண், தன்னை இந்துவாக அங்கீகரிக்க கோரி, கோர்ட்டில் மனு செய்தார்.மலேசியாவை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மனைவி சித்தி ஹாஸ்னா(27).இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மலேசிய கோர்ட்டில் ஹாஸ்னா ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், "நான் ஐந்து வயது சிறுமியாக இருந்த போது தெருவில் சுற்றித் திரிந்தேன், பங்காரம்மா என்ற பெயர் கொண்ட என்னை தத்தெடுத்த, சமூகத் தொண்டு அமைப்பினர், சில சடங்குகளை செய்து, என்னை முஸ்லிமாக அறிவித்தனர். சிறுவயதில் புரியாத மொழியில் அவர்கள் சொன்ன வாக்குறுதியை என்னால் பின்பற்ற இயலவில்லை. தற்போது, நான் இந்து மத முறைப்படி வாழ்ந்து வருகிறேன். எனவே, என்னை இந்துவாக அறிவிக்க வேண்டும். முஸ்லிம் மதத்திலிருந்து என்னை விடுவிக்க வேண்டும்"என ஹாஸ்னா கூறிள்ளார். இந்த மனு குறித்து, இரண்டு வார காலத்திற்குள் பதில் அளிக்கும் படி முஸ்லிம் நல வாரியத்திற்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment