
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பக்கிங்காம் அரண்மனை உள்ளது. இங்கு அரச குடும்பத்தினர் தங்கி யுள்ளனர். பொதுவாக கிறிஸ்துமஸ் பண்டிகை உள்ளிட்ட நாட்களில் இந்த அரண்மனை பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு அரண்மனையை மூட ராணி எலிசபெத் முடிவு செய்துள் ளார். அரண்மனையில் உள்ள கட்டிடங்கள் இடியும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
சமீப காலமாக சுவர்களில் பதிக்கப்பட்டுள்ள வேலைப்பாடு மிகுந்த கற்கள் விழுந்தன. அதில் சிக்கி பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் காயம் அடைந்தனர்.
அதே போன்று இளவரசி ஆன்னி சென்ற கார் மீது கட்டிடத்தின் கற்கள் விழுந்தன. வேகமாக சென்று விட்டதால் அவைகள் மீது விழவில்லை. மேலும், தரையில் கீறல்கள் இருப்பதால் நடப்பதற்கு கூட அரண் மனை ஊழியர்கள் அவதிப்படுகின்றனர்.
எனவே, பொதுமக்கள் பார்வைக்கு திறப்பதில்லை என ராணி எலிசபெத் முடிவு செய்துள்ளார். இது குறித்து அவர் அரண்மனை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
மேலும் அரண்மனை மராமத்து பணிக்காக ரூ.320 கோடி ஒதுக்கும்படி அரசிடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment