Pages

Thursday, December 24, 2009

முதலில் முத்தம் - இப்பொழுது அமைச்சர்

'முத்தம் புகழ்' கர்நாடக எம்.எல்.ஏ., ரேணுகாச்சார்யா நேற்று, அமைச்சராக பதவியேற்றுக் கொண் டார். கர்நாடகாவில், ஹொன்னாளி எம். எல்.ஏ., ரேணுகாச்சார் யா, நர்ஸ் ஜெயலட்சுமியுடன் தொடர்பு வைத்திருந்து, பரபரப்பு புகாரில் சிக்கினார்.இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள், பல பத்திரிகைகளில் வெளியாகி, கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.


சமீபத்தில், பா.ஜ., வில் கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது, ரெட்டி சகோதரர்களுடன் கூட்டு சேர்ந்து, அமைச்சர்ஷாபாவை பதவியிலிருந்து நீக்க, உறுதுணையாய் இருந்தவர் இந்த ரேணுகாச்சார்யா. கர்நாடக ராஜ்பவனில் நேற்று காலை நடைபெற்ற விழாவில், கவர்னர் பரத் வாஜ், ரேணுகாச்சார்யாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ரேணுகாச்சார்யாவுக்கு எதிராக கையெழுத்து வேட்டை நடத்திய எம்.எல்.ஏ.,க்கள் மட்டும், இவ்விழாவில் கலந்து கொள்ளவில்லை.

No comments:

Post a Comment