Pages

Thursday, December 24, 2009

மும்பையின் பெருமை - போதை பாட்டி

"கணவனின் இறப்பிற்கு பின், குடும்பத்தை காப்பாற்ற தனக்கென ஒரு போதை பொருள் கடத்தல் சாம்ராஜ்ஜியத் தையே 70 வயது மூதாட்டி ஒருவர் உருவாக்கி உள்ளார்" என, போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து, போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:


மகாராஷ்டிர மாநிலம் மும்பையை சேர்ந்தவர் பகவத் சிர்சாகர். இவர் போதைப் பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவரது சம்பாத்தியத்தில் தான் குடும்பம் நடந்து வந்தது.இந்நிலையில், பத்தாண்டுகளுக்கு முன், நோய் காரணமாக பகவத் சிர்சாகர் உயிரிழந்தார். இதனால், குடும்பத்தை காப்பாற்ற, அதே போதை தொழிலில் ஈடுபட வேண்டிய நிர்பந்தம், அவரது மனைவி கங்குபாய் சிர்சாகருக்கு (70) ஏற்பட்டது.


அவர், இந்த தொழிலில் ஈடுபட்டதும், தனக்கென வாடிக்கையாளர் வட்டாரம் ஒன்றை உருவாக்கி கொண்டார்.போதைப் பொருள் வாங்க மற்றும் விற்பதற்காக, கங்குபாய் பிற மாநிலங்களுக்கு தனியே பயணம் செய்கிறார். மும்பை மற்றும் தானே ஆகிய பகுதிகளே அவரது முக்கிய சந்தையாக திகழ்ந்துள்ளது. இவரை கடந்த சனிக்கிழமையன்று, போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார், கைது செய்தனர்.


அப்போது அவரிடம் இருந்து, 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள, 40 கி.கி., போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.இதே போன்று போதைப் பொருள் கடத்தலுக்காக, 2005ம் ஆண்டு கைது செய்யப் பட்டு, ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவரிடம் இருந்து 50 கி.கி., போதைப் பொருள் பறிமுதல் செய்ய பட்டது. இவருக்கு இரண்டு மகன்கள். அதில் ஒருவர் ஐந்தாண்டுகளுக்கு முன் காலமானார். மற்றொரு மகன் மற்றும் பேரக்குழந்தைகள் டோம்பிவிலி பகுதியில் வசிக்கின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment