Monday, December 28, 2009
யோகி படம் வெளியிட தடை
‘பருத்திவீரன்’ படத்தயாரிப்பாளர் ஞானவேல்ராஜன், யோகி பட தயாரிப்பாளர் அமீர் மீது சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். தனது வழக்கில், அமீர் ரூ.1 கோடி பாக்கி தர வேண்டும் என்றும், பணத்தை தராமல் யோகி திரைப்படம் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி ராஜசூர்யா விசாரித்து, படத்தை திரையிடலாம். ரூ. 50 லட்சத்துக்கு வங்கி உத்தரவாதம் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். இதை தொடர்ந்து யோகி படம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ராஜசூர்யா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பாக வக்கீல்கள் மனோகர், சகாதேவன் ஆஜராகி, ‘‘நீதிமன்ற உத்தரவின்படி ரூ. 50 லட்சத்துக்கான வங்கி உத்தரவாதத்தை இயக்குநர் அமீர் தாக்கல் செய்யவில்லை’’ என்றனர். இதைக் கேட்ட நீதிபதி, இன்னும் 4 வாரத்தில் வங்கி உத்தரவாதம் அளிக்க வேண்டும். தவறினால் அவரது அசையா சொத்துக்களை முடக்குவது தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என உத்தரவு பிறப்பித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment