Wednesday, December 30, 2009
முதன் முதலாக ஓரின சேர்க்கையாளர்கள் முறைப்படி திருமணம் செய்துள்ளனர்
லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜென்டினாவில் முதன் முதலாக ஓரின சேர்க்கையாளர்கள் முறைப்படி திருமணம் செய்துள்ளனர். தெற்கு அர்ஜென்டினாவின் உஷ§யா நகரைச் சேர்ந்தவர் ஜோஸ் மரியா டி பெல்லோ (வயது 40). இவரது நண்பர் அலெக்ஸ் பிரியர் (39).
இவர்களிடையே ஓரின சேர்க்கை உறவு இருந்தது. எய்ட்ஸ் நோயாளிகளான இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொள்ள விரும்பினர். இதற்கு போனஸ் ஏர் நகர மாஜிஸ்திரேட்டு அனுமதி வழங்கினார்.
இதை தொடர்ந்து இவர் கள் இருவரும் உலக எய்ட்ஸ் தினமான டிசம்பர் 1-ந்தேதி திருமணம் செய்ய முடிவு செய்து இருந்தனர். ஆனால் இவர்களின் திருமணத்துக்கு மேல் கோர்ட்டு நீதிபதி அனுமதி மறுத்தார். எனவே திருமணம் நடைபெறவில்லை.
இதனால் ஓரின சேர்க்கை ஜோடி உஷ§யா மாகாண கவர்னரை சந்தித்து முறையிட்டனர். அவர் இவர்களது திருமணத்துக்கு அனுமதி வழங்கினார். இதை தொடர்ந்து இவர்கள் இரு வரும் அங்குள்ளா பதிவு அலுவலகத்தில் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
இதன் மூலம் லத்தீன் அமெரிக்க நாடுகளின் முதல் ஓரின சேர்க்கை தம்பதி என்ற பெருமையை இந்த ஜோடி பெற்றுள்ளனர். திருமணத்தின் மூலம் மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது அனைத்து ஓரின சேர்க்கையாளர்கள் மற்றும் லெஸ்பியன் ஜோடிகளுக்கு ஒரு அர்த்தத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment